காஞ்சிபுரத்தில் அதிக திறன் கொண்ட 2 மின்மாற்றிகள்: எம்எல்ஏ துவக்கி வைப்பு
ஆனந்தா பேட்டை பகுதிகளில் 100 கே.வி திறன் கொண்ட புதிய மின் மாற்றிகளை மக்கள் பயன்பாட்டிற்கு எம்எல்ஏ ஏழிலரசன் துவக்கி வைத்தார்.
காஞ்சிபுரம் நகரம் 51வார்டுகள் பகுதிகளாக அமைந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் தொழிற்சாலை பெருகியதால் நகர விரிவாக்கம் அதிகளவில் ஏற்பட்டு குடியிருப்புகள் அதிகரித்தது. தற்போதைய விஞ்ஞான வளர்ச்சி காரணமாக மின்சாதன உபயோகம் பெருமளவில் அதிகரித்தது. இதன் காரணமாக மின்சாரம் சீராக அளிக்க முடியாமல் வீடுகளில் அவ்வப்போது பகுதி ஏற்படுவதாக தொடர்பு புகார் வந்தது.
மேலும் நகரின் விரிவாக்கம் கருத்தில் கொண்டு புதிய மின்மாற்றிகளை அமைக்க வேண்டும் என சட்டமன்றத்தில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசனின் கோரிக்கை அடிப்படையில் காஞ்சிபுரத்திற்கு அதிக திறன் கொண்ட மின்மாற்றிகள் வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் எல்ஐசி அலுவலகம் அருகே மற்றும் ஆனந்தா பேட்டை பகுதிகளில் 100 கே வி திறன் கொண்ட புதிய மின் மாற்றிகள் மின்சார வாரியத்தால் அமைக்கப்பட்டது.
இதனை இன்று மக்கள் பயன்பாட்டிற்கு காஞ்சி சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.ஏழிலரசன் துவக்கி வைத்தார். இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மின்வாரிய பொறியாளர் இளையராஜா, நகர திமுக செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம், மண்டலகுழு தலைவர் சந்துரு, நகர்மன்ற உறுப்பினர்கள் சுரேஷ், கமல், கௌதமிதிருமாதாசன் மற்றும் தேவதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu