பட்டப்பகலில் பைனான்ஸ் ஊழியரின் இருசக்கர வாகனத்தை திருட முயன்ற 2பேர் கைது
காஞ்சிபுரத்தில் பட்டப்பகலில் பைனான்ஸ் ஊழியரின் இருசக்கர வாகனத்தை திருட முயன்ற 2பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
HIGHLIGHTS

காஞ்சிபுரம் குமரக்கோட்டம் அருகில் தனியார் நிதி நிறுவன ஊழியரின் இரு சக்கர வாகனத்தை திருட முயன்ற நபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
காஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதியில் பைனாஸ் நிறுவன ஊழியரின் இருசக்கர வாகனத்தை அபேஸ் செய்ய முயன்ற போது கையும் களவுமாக சிக்கிய திருடனை கட்டிபோட்டு நய்ய புடைத்து காவல் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.
காஞ்சிபுரத்தை அடுத்த குருவிமலை பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவர் காஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதி பகுதியிலுள்ள ஒரு நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் வழக்கம் போல் பணிக்கு வந்த ஜெய்சங்கர் தனது இருசக்கர வாகனத்தில் கலெக்சனில் ஈடுபட்டுவிட்டு பிற்பகல் 3மணியளவில் தனது அலுவலகத்தின் கீழ்பகுதியில் தனது இருசக்கர வாகனத்தினை நிறுத்திவிட்டு மேல்தளத்திலுள்ள தனது அலுவலகத்திற்கு சென்றிருக்கிறார்.
இந்த நிலையில் இருவர் வாகன நிறுத்துமிடத்தில் சுற்றி சுற்றி வந்து முதலில் ஒருவன் அங்கிருந்த ஒரு இருசக்கர வாகனத்தை திறக்க முற்பட்ட போது திறக்க முடியாமல் போயிருக்கிறது.
பின்னர் பக்கத்திலிருந்த ஜெய்சங்கரின் இருசக்கர வாகனத்தை திறக்க முற்பட்டிருக்கிறான். இதனால் அதே பைனான்ஸில் பணிபுரியும் சக ஊழியர் சந்தேகமடைந்து அவனை நோட்டமிட்ட நிலையில் அங்கிருந்து சென்ற ஒருவன் மற்றொருவனை அனுப்பி வைத்த நிலையில் சற்று எதிர்பாராத திருடன் இருசக்கர வாகனத்தை சாவி கொண்டு திறக்க இவனை நோட்டமிட்டுக்கொண்டிருந்த சக ஊழியர்கள் கையும் களவுமாக த பிடித்து கத்தி கூச்சலிட்டிருக்கின்றனர்.
இதனை கண்ட பொதுமக்கள் திருடனை பிடித்து கயிற்றை கொண்டு கட்டி போட்டு தர்ம அடி கொடுத்து இது குறித்து சிவகாஞ்சி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். மேலும் அருகாமையில் நின்று கொண்டிருந்த மற்றொரு நபரையும் பொதுமக்கள் பிடிக்க முற்பட்ட போது தப்பியோடிய நிலையில் அவரையும் துரத்தி பிடித்தனர்.
இதனையெடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகாஞ்சி போலீசாரிடம் இருவரையும் ஒப்படைத்தனர்.பின்னர் இருவரையும் சிவகாஞ்சி காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டபகலில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் இருசக்கர வாகனத்தை திருட வந்த திருடர்களால் அப்பகுதி சற்று நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.