காஞ்சிபுரம் ஒன்றியத்தில் 18 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்பு

காஞ்சிபுரம் ஒன்றியத்தில் 18 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்பு

பைல் படம்

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் இன்று புதிதாக தேர்வு செய்யப்பட்ட 18 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பதினெட்டு ஒன்றிய கவுன்சிலர் களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் போட்டியிட்ட 18 ஒன்றிய கவன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்ட 18 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. இதில் 1வது வார்டு மோகனா இளஞ்செழியன், இரண்டாவது வார்டு வளர்மதி, நாலாவது வார்டு பாலாஜி,

5வது வார்டு ஆதிலட்சுமி, 6வது வார்டு ராம்பிரசாத், 7வது வார்டு ஹேமலதா, 9-வது வால்ட் மலர்கொடி, 10வது வார்டு கோடீஸ்வரி, 12வது வார்டு ரேகா, 13வது வார்டு தேவபாலன், 14வது வார்டு. 8வது வார்டு வேட்பாளர் விமல்ராஜ், 15வது வார்டு வேட்பாளர் பேபி சசிகலா 3வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் ரமேஷ் உள்ளிட்ட 18 ஒன்றிய கவுன்சிலர்கள் இன்று காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் பதவி ஏற்றுக் கொண்டனர்.

Tags

Next Story