காஞ்சிபுரம் அருகே வீட்டின் பின்புற கதவை உடைத்து 17 சவரன் நகை கொள்ளை

காஞ்சிபுரம் அருகே வீட்டின் பின்புற கதவை உடைத்து 17 சவரன் நகை கொள்ளை
X

வெங்கடாபுரம் பகுதியில்  நகை கொள்ளை நடந்த வீடு.

காஞ்சிபுரம் அருகே வீட்டின் பின்புற கதவை உடைத்து 17 சவரன் நகை கொள்ளையடித்தவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

காஞ்சிபுரம் அருகே போட்டோகிராபர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து அதிகாலையில் 17 சவரன் நகை கொள்ளையடித்து தப்ப முயன்ற போது அவர்களை தடுத்த அவரது மனைவியை தள்ளிவிட்டு தப்பியோடியவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

காஞ்சிபுரம்‌ அடுத்த வெங்கடாபுரம் கிராமம் ரோட்டு தெருவில் வசிப்பவர் ஏழுமலை . காஞ்சிபுரம் பஸ் நிலைய பகுதியில் ராஜ் வீடியோ போட்டோகிராபர் மற்றும் விவசாய வேலைகள் செய்து வருகிறார்.

இவருடைய மனைவி, இரண்டு பிள்ளைகள் மற்றும் மாமியார் ஆகியோர் வீட்டில் அனைவரும் நேற்று உணவு அருந்திவிட்டு வழக்கம் போல் தூங்கிக் கொண்டிருந்தனர்.

அதிகாலை 02.00 மணிக்கு வீட்டின் பின்புறம் கதவு திறந்து அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் உள்ளே வந்து வீட்டில் பீரோவில் இருந்த 173/4 சவரன் தங்கம், 550 கிராம் வெள்ளி, ரூபாய் 2000/- கொள்ளையடித்து விட்டு செல்லும்போது , சத்தம் கேட்ட நிலையில் ஏழுமலையின் மனைவி அம்பிகா பார்த்துவிட்டு கூச்சலிடும் போது அவரை கீழே தள்ளி விட்டு பின்பக்கமாக மூன்று பேரும் தப்பிச் சென்று விட்டனர்.

இதில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினர் திருட்டு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மூன்று குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

இதேபோல் சாலவாக்கம் பகுதியில் 5 சவரன் நகையை வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று நபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களது இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story