காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13518 மாணவ மாணவிகள் நாளை +2 தேர்வு எழுத உள்ளனர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13518 மாணவ மாணவிகள் நாளை +2 தேர்வு எழுத உள்ளனர்
X

 காஞ்சிபுரம் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி தேர்வு அறையில் மாணவியரின் தேர்வு எண் எழுதும் ஆசிரியர் மற்றும் அதனை கண்காணிக்கும் மைய முதன்மை கண்காணிப்பாளர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6 ஆயிரத்து 516 மாணவர்களும் , 7ஆயிரத்து‌ இரண்டு மாணவிகளும் 50 மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்

தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் நாளை முதல் பிளஸ் 2 அரசு தேர்வு துவங்க உள்ளது. இதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் வழிகாட்டு நெறிமுறைகளும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அனைத்து தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர் களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை தொடங்க உள்ள பிளஸ் 2 தேர்வில் 6516 மாணவர்களும் 7002g மாணவிகள் என மொத்தம் 13 ஆயிரத்து 518 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

இவர்களுக்கான தேர்வு எழுத மாவட்டம் முழுவதும் 50 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு அறைக்கும் தலா 20 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுகின்றனர்.ஒவ்வொரு மையத்திற்கும் ஒரு முதன்மைத் தேர்வு கண்காணிப்பாளர் ஒருவரும், அவருக்கு கூடுதலாக பணிபுரிய ஒரு கண்காணிப்பு அலுவலரும் நியமிக்கப்படுவர். மேலும் மாவட்டம் முழுவதும் 50 துறை அலுவலர்களும் 6 கூடுதல் துறை அலுவலர்களும் தேர்வு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்வு நடைபெறுவதை கண்காணிக்க மாவட்டம் முழுவதும் 85 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர்.தேர்வில் முறைகேடுகள் செய்யும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு அறிவித்த வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி.திருவளர்செல்வி தலைமையில் அந்தந்தப் பள்ளிகளில் தேர்வுகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!