காஞ்சிபுரம் மாவட்ட 2 நாள் வாக்காளர் சிறப்பு முகாமில் 13,226 விண்ணப்பங்கள்
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாமில் புதிய வாக்காளராக தன்னை இணைத்துக் கொள்ள விண்ணப்பம் அளித்த இளம் பெண்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி தற்போது அனைத்து கட்சிகளும் தங்கள் கட்சி சார்பாக பணிகளை துவக்கி உள்ளனர். தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் பல்வேறு கட்சிகள் தங்கள் வாக்கு சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறது.
இதில் வாக்கு சாவடி மையங்களில் நடைபெறும் வாக்காளர் சிறப்பு முகாமில் பங்கேற்று புதிய வாக்காளர்களை இணைத்தல் இடம் மாறிய வாக்காளர்களை கண்டறிதல் இறந்தவர்களின் பெயர் நீக்குதல் உள்ளிட்ட பணிகளை வாக்கு சாவடி நிலையம் முகவர்கள் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் புகைப்படத்தில் கூடிய வரைவு வாக்காளர் பட்டியலை நான்கு தொகுதிகளின் சார்பாக வெளியிடப்பட்டு அனைத்துக் கட்சியினரும் அதை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் அதிகாரி என்ற முறையில் நவம்பர் 4 ,5 ஆகிய தேதிகளில் சிறப்பு வாக்காளர் முகம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்கு சாவடி மையங்களிலும் நடைபெறும் எனவும் இதில் அனைவரும் பங்கேற்று பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அதன் அடிப்படையில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வாக்கு சாவடிகளிலும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் வாக்கு சாவடி அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் பணிபுரிந்து செயல்பட்டனர்.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 13 ஆயிரத்து 226 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.
இதில் 8 026 புதிய வாக்காளர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தரப்பட்டுள்ளது.
இதேபோல் வாக்காளர்கள் ஆதார் எண் இணைப்பது குறித்த விண்ணப்பங்கள் ஏதும் வழங்கப்படவில்லை.
சட்டமன்ற தொகுதிக்குள் வாக்கு சாவடி மையம் மாறுதல் குறித்து 56 மனுக்கள் அலுவலர்களால் வழங்கப்பட்டுள்ளது.
பெயர் நீக்குதல் சம்பந்தமாக 169 மனுக்கள் அலுவலர்களால் வழங்கப்பட்டுள்ளது மேலும் திருத்தங்கள் மேற்கொள்ள 1865 மனுக்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மேலும் இரண்டு நாள் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu