வாலாஜாபாத் பகுதியில் அரசு விதிகளை மீறிய கனரக லாரிகளுக்கு ரூ11.6 லட்சம் அபராதம்
அபராதம் விதிக்கும் அதிகாரிகள் (கோப்பு படம்)
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்தரமேரூர் மற்றும் வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான கல் குவாரிகள் மற்றும் அரவை தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. இதிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான கன ரக லாரிகள் கட்டுமான பொருட்களை சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான தாம்பரம் செங்கல்பட்டு மற்றும் பிற மாவட்டங்களுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது.
இது போன்ற கனரக லாரிகள் அரசு விதிகளை மீறி செயல்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில், மாவட்ட ஆட்சியரின் அறிவுரைப்படி வட்டாட்சியர்கள் காவல்துறையினர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஒருங்கிணைந்து அவ்வப்போது விதிமீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி இருந்தார்.
அவ்வகையில் வாலாஜாபாத் வட்டாட்சியர் கருணாகரன், வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம், காவல்துறையினர் என அனைவரும் வாலாஜாபாத் ஒரகடம் பழையசீவரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒருங்கிணைந்து கடந்த இரண்டு மாதங்களாக தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அவ்வகையில் கடந்த ஜூலை மாதம் ஒன்பது லாரிகளும் ஆகஸ்ட் மாதம் 5 லாரிகளும் செப்டம்பர் மாதம் தற்போது வரை மூன்று லாரிகள் என 17 லாரிகள் மீது அரசு விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி ரூபாய் 11.60 லட்சம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டு இதுகுறித்து வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற குவாரி உரிமையாளர்கள் லாரி உரிமையாளர்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் விற்பனை மேற்கொள்ளும் உரிமையாளர்கள் என அனைவருக்கும் சுற்றுச்சூழல் அதிகாரிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் பல்வேறு அறிவுரைகளை வழங்கி விபத்தில்லாமல் வாகனம் ஓட்ட ஓட்டுனருக்கு அறிவுறுத்துதல் மற்றும் அரசு விதிகளின்படி பாரங்கள் ஏற்றி செல்லுதல் என அனைத்தையும் கடைபிடிக்க அறிவுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu