உலக நன்மைக்காக 108 பெண்கள் கலந்து கொண்ட தீப விளக்கு பூஜை..!

உலக நன்மைக்காக 108 பெண்கள் கலந்து கொண்ட தீப விளக்கு பூஜை..!
X

உலக நன்மைக்காக 108 பெண்கள் கலந்து கொண்ட விளக்கு பூஜை காஞ்சிபுரம் ஆதி பீடபரமேஸ்வரி காளிகாம்பாள் திருக்கோயில் நடைபெற்ற போது

காஞ்சிபுரம் ஆதி காமாக்ஷி ஆதிபீட பரமேஸ்வரி காளிகாம்பாள் திருக்கோயில் ஆடி மாதத்தினை ஒட்டி பல்வேறு சிறப்பு பூஜைகள் நாள்தோறும் நடைபெற்ற வருகிறது

காஞ்சிபுரம் ஆதி காமாக்ஷி ஆதி பீட பரமேஸ்வரி காளிகாம்பாள் திருக்கோவில் ஆடி மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமை ஒட்டி ஊஞ்சல் சேவை நடைபெற்றது.மேலும் 108 பெண்கள் கலந்து கொண்டு உலக நன்மைக்காக வேண்டி 108 தீப விளக்கு ஏற்றி வழிபாடு மேற்கொண்டனர்.சிறப்பு விளக்கு பூஜை ஓட்டி பரதநாட்டிய கலை நிகழ்ச்சியும், அம்மன் ஊஞ்சல் சேவையும் நடைபெற்றது

பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் அருகே அமைந்துள்ள,ஸ்ரீ ஆதி காமாட்சி கோவில் என அழைக்கப்படும், ஸ்ரீ ஆதி காமாட்சி, ஆதி பீடா பரமேஸ்வரி, காளிகாம்பாள் திருக்கோவிலில் ஆடி மாத மூன்றாம் வெள்ளிக்கிழமை ஒட்டி 108 பெண்கள் கலந்து கொண்டு உலக நன்மைக்காக வேண்டிக்கொண்டு 108 விளக்கு பூஜை நடைபெற்றது.

திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜையில் நிகழ்ச்சியில் விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர்.


திருவிளக்கு பூஜை ஒட்டி ஆதி பீடா பரமேஸ்வரி, காளிகாம்பாள் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, லட்சுமி,சரஸ்வதி தேவிகளுடன் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்து கோவிலின் உட்பிரகாரத்தில் வலம் வந்து பின் திருக்கோவில் கொலு மண்டபத்தில் எழுந்தருளினார்.

சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஆதி காமாட்சி அம்மன் ஊஞ்சல் சேவை நடைபெற்றது. சிறப்பு விளக்கு பூஜை ஒட்டி பரதநாட்டியம் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மஞ்சள் குங்குமம் மற்றும் தாலி கயிறு, அன்னதான பிரசாதங்களாக சக்கரை பொங்கல், புளியோதரை உள்ளிட்டவை பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!