தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்வில் 339 வழக்குகளில் 10.43 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கல்
காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற லோக் அதாலத் நிகழ்வில் வாகன விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகை வழங்கிய மாவட்ட நீதிபதி செம்மல் மற்றும் நீதிமன்ற நீதிபதிகள்
காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட நீதிபதி U.செம்மல் தலைமையில் மக்கள் நீதிமன்றம் என அழைக்கப்படும் லோக் அதாலத் நிகழ்வில் 339 வழக்குகள் தீர்வு கண்டு ரூபாய் 10.43 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இந்தியா முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் அதிக அளவில் தேங்கியுள்ளதாக அறிந்து அதனை விரைந்து தீர்க்கும் வண்ணம் சமரச தீர்வு மையம் எனும் அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் வழக்குகளை இரு தரப்புக்கும் விரைவாக தீர்ப்பு கிடைக்கும் வகையில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அவ்வகையில் காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று வட்ட சட்டப் பணி குழு சார்பில் மக்கள் நீதி மையம் என அழைக்கப்படும் லோக் அதாலத் நிகழ்வு மாவட்ட நீதிபதி செம்மல் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நில வழக்குகள், வாகன விபத்து உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில் இரு தரப்பினரையும் அழைத்து சமரச தீர்வு பல்வேறு அமர்வுகளில் நீதிபதிகள் தலைமையில் நடைபெறுகிறது.
அவ்வகையில் இன்று காஞ்சிபும் நீதிமன்ற வளாகத்தில் காலை துவங்கிய இந்த மக்கள் நீதிமன்ற நிகழ்வில் 500க்கும் மேற்பட்ட வழக்குகள் கையாளப்பட உள்ளது.
முதல் முதலில் வாலாஜாபாத் வண்டலூர் சாலையில் எழுச்சூர் பகுதியை சேர்ந்த குமார் என்பவர் சாலை விபத்தில் பலியான வழக்கு சமரச தீர்வின் மூலம் 11 லட்சம் இழப்பீடாக அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது.
இதேபோல் 2021 இல் அம்மணம்பாக்கம் பகுதியில் நடைபெற்ற விபத்தில் காயம் அடைந்த நபருக்கு ரூபாய் 21 லட்சம் வழங்க தீர்வு ஏற்பட்டு அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்நிகழ்ச்சியில் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வாசுதேவன் , முதன்மை சார்பு நீதிமன்ற நீதிபதி அருண் சபாபதி, கூடுதல் சார்பு நீதிமன்ற நீதிபதி திருஞானசம்பந்தம், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ராஜேஸ்வரி உள்ளிட்ட நீதிபதிகள் கலந்து கொண்டு வழக்குகளை கையாண்டு வருகின்றனர்.
இறுதியாக அனைத்து நீதிமன்றங்களிலும் 339 வழக்குகள் முழுமையான தீர்வு காணப்பட்டு அதற்கான இழப்பீட்டுத் தொகை ரூபாய் 10.49 கோடி வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் வழக்கறிஞர்கள், வழக்கு தொடர்ந்தவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu