காஞ்சிபுரம், உத்திரமேரூர் தொகுதியில் அன்பு மணி ராமதாஸ் தீவிர பிரசாரம்

காஞ்சிபுரம், உத்திரமேரூர் தொகுதியில்  அன்பு மணி ராமதாஸ் தீவிர பிரசாரம்
X
காஞ்சிபுரம், உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தீவிர பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்-6ல் நடைபெறுகிறது. தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி, திமுக தலைமையிலான கூட்டணி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமையிலான கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என ஒவ்வொரு தொகுதியிலும் 5 முனைப்போட்டி நிலவுகிறது. இது தவிர்த்து பலர் சுயேட்சையாகவும் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில் அனைத்து அரசியில் கட்சி தலைவர்களும், ஊர், ஊராக, வீதி, வீதியாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் & உத்தரமேரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வாலாஜாபாத் மற்றும் காஞ்சிபுரம் கோவிந்தசாமி அகரம் கிராமத்தில் பொதுமக்களிடையே வாக்குகள் சேகரித்தார்.

உத்திரமேரூர் தொகுதி வேட்பாளர் சோமசுந்தரத்திற்கு இரட்டை இலை சின்னத்திலும் , காஞ்சிபுரம் சட்டமன்ற தேர்தலில் பாமக வேட்பாளர் மகேஷ்குமாருக்கு மாம்பழ சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டு பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது.

தற்போதைய தேர்தல் விவசாயிக்கும் , வியாபாரிகளுக்கும் நடைபெறுகின்ற போட்டியே, விவசாய கடன், கல்வி கடன், பெண்கள் பாதுகாப்பு என வரும் காலங்களில் வளமான தமிழகம் உருவாக அனைவரும் மீண்டும் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story