வேட்பாளர்களுக்காக காத்திருந்த அதிகாரிகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட மூன்று தொகுதிகளில் முதல் நாளன்று ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதி வாரியாக தேர்தல் அலுவலர்கள் நியமிக்கபட்டு இன்று காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனு தாக்கலுக்கான நேரம் இருந்த நிலையில் காஞ்சிபுரம் , உத்தரமேரூர் , ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 3 தொகுதிகளிலும் இதுவரை 1 வேட்பாளர்கள் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.எப்பொழுதும் முதல் நாளன்று சுயேட்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ய பல்வேறு வேடமிட்டு , வித்தியாசமாக வருவார்கள்‌ என எதிர்பார்த்த நிலையில் ஒருவர் கூட வராதது அதிகாரிகளுக்கு ‌ஏமாற்றத்தை அளித்தது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil