சிலம்பம் பயின்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா

சிலம்பம் பயின்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா
X

படப்பையில் சிலம்பம் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் பஞ்சபூத தற்காப்பு கலைக்கழகம், மற்றும் பஞ்சபூத சர்வதேச சிலம்பம் கலைக்கழகம் ஆகியவை சார்பில் கடந்த ஒரு மாத காலமாக மாணவர்களுக்கு சிலம்ப பயிற்சி அளிக்கப்பட்டது.இந்த பயிற்சி இன்று நிறைவடைந்தது. இதனையொட்டி சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் பஞ்சபூத சர்வதேச சிலம்பம் கலைக்கழகத்தின் தலைமை பயிற்சியாளர் சதீஷ்குமார் காஞ்சிபுரம் மாவட்ட பயிற்சியாளர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி தமிழரின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் குறித்து அனைவரும் தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் பேசினார்.மாணவர்கள் கற்றுக் கொண்ட பயிற்சியில் இருந்து சிலம்ப சாகசங்களை செய்து காட்டினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை படப்பை பகுதி பயிற்சியாளர் மணிகுமார் செய்திருந்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!