தன் அழகை தானே ரசித்து வீதி உலா வந்த காமாட்சியம்மன்

தன் அழகை தானே ரசித்து வீதி உலா வந்த காமாட்சியம்மன்
X

காஞ்சிபுரத்தில் தன் அழகை தானே ரசித்தபடி பக்தர்களுக்கு காமாட்சி அம்மன் அருள் பாலித்தார்.

கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் புகழ்பெற்றது காஞ்சி காமாட்சி அம்மன் திருக்கோவில். இக்கோவிலின் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 16ம் தேதி மாலை மூஷிக வாகனத்தில் விநாயகர் எழுந்தருள விழா தொடங்கியது. நாள்தோறும் காலை, மாலை என இருவேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் காமாட்சிஅம்மன் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

இன்று ஐந்தாம் நாள் காலை சிறப்பு அலங்காரத்தில் தங்க பல்லக்கில் அமர்ந்து தன் எதிரே நிலை கண்ணாடியில் தன் அழகை தானே ரசித்து நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காமாட்சி அம்மன் வெள்ளை பட்டு உடுத்தி கையில் தங்க கிளி , சிறப்பு மலர்களால் ஆன ஜடை , மனோரஞ்சித மலர்களாலான மாலை என அழகுடன் காட்சியளித்த அம்மனை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Tags

Next Story