உயிரினங்களின் விபரம் கூறி மாணவி சாதனை
காஞ்சிபுரத்தில் உயிரினங்களின் பெயர் மற்றும் ஆயுட்காலம் கூறி மாணவி சாதனை படைத்தார்.
காஞ்சிபுரம் டெம்பிள் சிட்டி பகுதியை சேர்ந்த சுப்பிரமணி - விஜயபிரபா தம்பதியினர் மகள் பாக்கியலட்சுமி.இவர் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். சிறு வயதிலிருந்தே உயிரினங்கள் மீது ஏற்பட்ட அன்பால் அது குறித்து தொடர்ந்து பல புத்தகங்களை தேடி படித்து வந்த நிலையில் விலங்குகளின் பெயர் மற்றும் அதன் ஆயுட்காலம் தெரிந்து கொண்டு அது குறித்து சாதனை மேற்கொள்ள ஆசிய சாதனை புத்தக பதிவில் இடம் பெற விண்ணப்பித்து இருந்தார். இதற்கான மாணவி கொரோனா விடுமுறையை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் பயிற்சி கொண்டார்.
அதனடிப்படையில் இன்று ஒரு நிமிடத்தில் அதிக அளவில் விலங்குகள் பெயர் மற்றும் அதன் ஆயுட்காலம் தெரிவிக்கும் நிகழ்வு தென் பிராந்திய ஆசிய சாதனை புத்தக ஒருங்கிணைப்பாளர் விவேக் மற்றும் செரிபா முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாக்கியலட்சுமி ஒரு நிமிடத்தில் ஐம்பத்தொன்பது விலங்குகளின் பெயர்கள் மற்றும் அதன் ஆயுட்காலம் குறித்து துல்லியமாக கூறி சாதனை புரிந்தார்.இந்த சாதனை அடுத்த ஆண்டு ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெறும் எனவும் அதற்கான சான்றிதழ் மற்றும் பதக்கங்களை அதன் ஒருங்கிணைப்பாளர்கள் இன்று பள்ளி மாணவிக்கு அளித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். பள்ளி மாணவர்கள் விருப்பங்களை அறிந்து அவர்கள் துறை சார்பாக சாதனை படைக்க பெற்றோர்கள் அதிக அளவில் ஊக்குவிக்க வேண்டும் எனும் நோக்கத்திலேயே இந்நிகழ்வு நடைபெற்றதாக தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu