உயிரிழந்த அரசுஊழியர் மகளுக்கு பணி நியமன ஆணை

உயிரிழந்த அரசுஊழியர் மகளுக்கு பணி நியமன ஆணை
X

கொரோனாவில் உயிரிழந்த கூட்டுறவு ஊழியர் குடும்பத்திற்கு பணி ஆணை வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்தவர் குணசேகரன். கடந்த 5 மாதங்களுக்கு முன் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இவரது குடும்பத்தினர் தங்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டதின் அடிப்படையில் பட்டபடிப்பு முடித்த அவரது மகள் அபிராமிக்கு பணி நியமன ஆணையினை காஞ்சிபுரம் திருவள்ளூர் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வாலாஜாபாத் கணேசன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் லோகநாதன் , பொது மேலாளர் விஜயகுமாரி ஆகியோர் உடன் இருந்தனர்.பணி நியமனம் பெற்றவர் இரண்டு ஆண்டுகளுக்குள் கூட்டுறவு பட்டயபயிற்சியினை நிறைவு செய்ய வேண்டும் எனவும் , தவறும் நிலையில் பணி இழக்கும் வாய்ப்பு உருவாகும் என விதிமுறைகள் தெரிவிக்கப்பட்டது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!