காஞ்சிபுரத்தில் பாமக., ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரத்தில் பாமக., ஆர்ப்பாட்டம்
X

காஞ்சிபுரத்தில் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு கேட்டு பாமகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வன்னியர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் 20 சதவிதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து பாமக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதில் காஞ்சிபுரம் மாவட்ட பாமக சார்பில் மாநில துணை செயலாளர் பொன் கங்காதரன், மாநில இளைஞரணி செயலாளர் மகேஷ் , மாவட்ட செயலாளர் உமாபதி ஆகியோர் தலைமையில் பேரணியாக வந்த பாமகவினர் காவலன் கேட் அருகே இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி தமிழக அரசை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாமக ஆர்ப்பாட்டத்தினை முன்னிட்டு 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பின் பாமக வினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 20 சதவித இடஒதுக்கீட்டை வலியுறுத்தி கோரிக்கை மனுவினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!