மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்

மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்
X

காஞ்சிபுரத்தில் டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் அருகே சேக்குபேட்டை சாலியர் தெருவில் அரசு மதுபானக் கடை செயல்பட்டு வந்தது. பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக கடந்த ஆறு மாதங்களாக மூடியிருந்த நிலையில் தற்போது இன்று காலை மீண்டும் அந்த கடை திறக்கப்பட்டது. இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் மதுபான கடையை நிரந்தரமாக மூடக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த சிவகாஞ்சி போலீசார், பொதுமக்களுடன் சமாதான பேச்சில் ஈடுபட்டு இதுகுறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் எனவும் இதற்கு சிறிது கால அவகாசம் வேண்டுமென தெரிவித்தனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் கடந்த ஆறு மாத காலமாக பெண்கள் தைரியமாக இப்பகுதியை கடந்து சென்றதால் இனிவரும் காலங்களில் அது போன்ற நிலையே நீடிக்க வேண்டும் எனவும் இதனால் நிரந்தரமாக டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்துவோம் எனவும் தெரிவித்தனர்.

Tags

Next Story