காஞ்சிபுரம் அருகே லாரியில் தீ விபத்து

காஞ்சிபுரம் அருகே லாரியில் தீ விபத்து
X

காஞ்சிபுரம் அருகே லாரியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே ராஜகுளம் என்ற பகுதியில் 2 லாரிகள் முந்திச் செல்வதில் ஏற்பட்ட போட்டியில் ஒன்றுக்கொன்று உரசி கொண்டது . இதன் காரணமாக லாரியை சாலையோரம் நிறுத்தி வைத்திருந்தனர். இந்நிலையில் ஒரு லாரியின் பேட்டரி பகுதியில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு லாரி திடீரென தீப்பற்றி எரிந்தது. இது குறித்து தகவலறிந்து வந்த காஞ்சிபுரம் தீயணைப்பு வீரர்கள் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இதுகுறித்து தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!