காஞ்சிபுரம் : சட்டப்பேரவை தேர்தல் மாதிரி வாக்குப்பதிவு

காஞ்சிபுரத்தில் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.
வரும் 2021 தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி காஞ்சிபுரம் நுகர்பொருள் வாணிப வளாகத்தில் உள்ள கிடங்கில் 3304 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 2341 மின்னணு கட்டுப்பாட்டு கருவிகள், 2,518 விவி பாட் கருவிகளை பாதுகாப்பாக வைத்துள்ளனர். இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சரிபார்ப்பு பணிகள் சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இதில் 35 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 145 கட்டுப்பாட்டு கருவிகள்,190 விவிபாட் கருவிகள் பழுதாகி இருந்தது தெரியவந்தது. இவற்றை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பயன்படுத்த உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலை இருப்பது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ஆய்வு செய்தார். இந்த இயந்திரங்கள் சரியாக உள்ளதா? என்பதை அறியும் வகையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 15 போலி வாக்காளர்கள் மற்றும் அவர்களுக்கான சின்னத்துடன் ஒரு நோட்டா சின்னம் பொருத்தப்பட்டு ஆயிரம் வாக்குகள் வீதம் பதிவு செய்யப்பட்டு சரிபார்க்கப்பட்டது.இதில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் , காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் உள்ளிட்ட அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள் வாக்கு பதிவு செய்து இயந்திரத்தின் நிலை குறித்து தெரிந்துகொண்டனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu