காஞ்சிபுரம் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு ரத்து - பக்தர்கள் ஏமாற்றம்

காஞ்சிபுரம் பெருமாள் கோவில்களில் முக்கிய நிகழ்வான வைகுண்டஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
காக்கும் கடவுளான பெருமாளின் திவ்யதேசங்களில் வைகுண்ட ஏகாதசி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அன்று நாள் முழுவதும் பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக பெருமாளை தரிசிப்பது பெரும் பாக்கியமாக கருதுவர்.அவ்வகையில் காஞ்சிபுரத்தில் திவ்ய தேசங்களான வைகுண்ட பெருமாள் மற்றும் அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில்களில் அதிகாலை 5 மணியளவில் சொர்க்க வாசல் வழியாக எம்பெருமான் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்த பின் அவ்வாசல் வழியாக நீண்ட வரிசையில் பக்தர்கள் நின்று எம்பெருமானை தரிசிப்பது வழக்கம்.
தற்போது கொரோனோ பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்கும் நோக்கில் வரும் 25ம் நாள் வைகுண்ட ஏகாதசி விழா அன்று சொர்க்கவாசல் திறப்பு விழா ரத்து செய்யப்படுவதாக கோயில் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.மாவட்ட நிர்வாகம் ஆலோசனைப் படியும் பொதுமக்களிடையே கொரோனா பரவலை தடுக்கும் நோக்கிலும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் பக்தர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu