மூதாட்டியிடம் செயினை பறித்த மர்ம நபர் கைது
சென்னை நங்கநல்லூர், பாலாஜி நகர்,10வது தெருவை சேர்ந்தவர் வயதான மூதாட்டி, ராதா(70), இவர், கடந்த 11ம் தேதி காலை வீட்டிற்கு அருகில் உள்ள தொட்டியில் குப்பை கொட்டி விட்டு வீடு திரும்பினார். அப்போது, பின்னால் வந்த ஆசாமி மூதாட்டி அணிந்திருந்த 2 சவரன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டான். இது குறித்து பழவந்தாங்கல் போலீசார் வழக்குபதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை மர்ம நபரை தேடிவந்தனர்.
செயின் பறிப்பில் ஈடுபட்டது நங்கநல்லூர், பர்மா தமிழர் காலனியை சேர்ந்த முத்து(41), என்பதும், விமான நிலையத்தில் சுமை தூக்கும் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், மூதாட்டியிடம் பறித்த தங்க சங்கிலியை அடகு கடையில் இருந்து மீட்டனர். பின், முத்துவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu