பூ விற்று,வடை சுட்டு வாக்கு கேட்ட வேட்பாளர்

ஆலந்தூர் தொகுதியில் மக்கள் நீதி மையம் கட்சி வேட்பாளர் வாக்காளர்களை கவர்வதற்காக பூ வியாபாரம் செய்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் வேட்பாளராக சரத்பாபு என்பவர் போட்டியிடுகிறார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாள் முதல் ஆலந்தூர் தொகுதி முழுவதும் இளைஞர்கள் பலத்துடன் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.இதில் அவர் பூ விற்கும் பாட்டியிடம் பூக்களை விற்று வாக்கு சேகரித்தார். பின்னர் அருகில் உள்ள கடையில் வடை சுட்டு விற்று வாக்குகளை கேட்டார். மக்கள் நீதி மையம் வேட்பாளர் வித்தியாசமான முறையில் வாக்காளர்களை அணுகுவது பெறும் வரவேற்பை பெற்றுள்ளது

Tags

Next Story
ai future project