கல்குட்டையில் குதித்து மூதாட்டி தற்கொலை

கல்குட்டையில் குதித்து மூதாட்டி தற்கொலை
X

மின்சாரம் தாக்கி சிறுமி பலி

கல்குட்டையில் குதித்து மூதாட்டி ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டார்.

சென்னை, நங்கநல்லுார், பர்மா தமிழர்காலனியை சேர்ந்தவர் பாக்கியா. இவரது தந்தை இறந்த பின், தாயார் முனியம்மாள்,60 உடன் வசித்த வந்தார். குடும்பத்தில் உள்ளவர்களிடம் முனியம்மாள் அடிக்கடி கோவப்பட்டு வீட்டை விட்டு சென்றுவிடுவார்.

அதேபோல, சில நாட்களுக்கு முன் மகளிடம் தகராறில் ஈடுபட்டு விட்டை விட்டு வெளியேறியவர் திரும்பவில்லை. அவரை தேடி சென்றபோது, நங்கநல்லுார் முனீஸ்வரன் கோவில் கல்குட்டையில் சடலமாக மிதப்பது தெரியவந்தது.

இத்தகவல் அறிந்த போலீசார் அவரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், மகளிடம் கோபித்துக் கொண்டு, குட்டையில் குதித்து தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் என தெரியவந்தது. இது குறித்து பழவந்தாங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!