நங்கநல்லூரில் நடைபயிற்சி சென்ற மூதாட்டியிடம் 6 சவரன் நகை பறிப்பு

நங்கநல்லூரில் நடைபயிற்சி சென்ற மூதாட்டியிடம் 6 சவரன் நகை பறிப்பு
X

நங்கநல்லூரில் வாக்கிங் சென்ற மூதாட்டியிடம் நகையை பறிக்கும் மர்ம நபர் சிசிடிவி காட்சி

நங்கநல்லூரில் நடைபயிற்சி சென்ற மூதாட்டியிடம் 6 சவரன் நகையை பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை நங்கநல்லூர் வீரராகவன் தெருவில் வசித்து வருபவர் தமிழரசி(68), இவர் இன்று காலை நடைபயிற்சி மேற்கொள்ள தனது வீட்டிலிருந்து சென்று நடைபயிற்சியை முடித்து விட்டு மீண்டும் வீட்டை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார்.
அபோது நங்கநல்லூர் 28 வது தெரு, வீரராகவன் தெரு சந்திப்பில் நடந்து வந்து கொண்டிருந்த போது எதிர்புறத்தில் நடந்து வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென மூதாட்டியின் அருகில் வந்து கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் நங்கநல்லூர் 32வது தெரு வழியாக ஓடி விட்டார்.
உடனடியாக மூதாட்டி அருகில் உள்ள பழவந்தாங்கல் போலீஸ் பூத்தில் சென்று தகவல் தெரிவித்ததின் பேரில் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை செய்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி செயின் பறிப்பு ஆசாமியை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!