ஜன. 27க்கு பின்னும் அதிமுக ஆட்சி: முதல்வர்

ஜன. 27க்கு பின்னும் அதிமுக ஆட்சி: முதல்வர்
X

வரும் ஜனவரி 27 ஆம் தேதிக்குப் பின்னரும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி தான் இருக்கும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்டந்தோறும் தமிழக முதல்வர் எட்பபாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். இந்நிலையில் இன்று காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் வாலாஜாபாத்தில் பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசியதாவது:

வரும் 27 ஆம் தேதிக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருப்பாரா என்று கூறி வரும் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே இந்த ஆட்சி ஒரு மாதத்தில் கவிழும், ஆறு மாதத்தில் கவிழும், ஒரு வருடத்தில் கவிழும் எனக் கூறி வந்தார். ஆனால், நான்கு ஆண்டுகளாக சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. வருகின்ற சட்டமன்ற பொதுத் தேர்தலிலும் அதிமுக தான் வெற்றி பெறும்.அதிமுக அரசு பொறுப்பேற்றவுடன் மின்மிகை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தற்போது தமிழகத்தில் தேவைக்கு அதிகமாகவே மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கையில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடம் வகிக்கிறது. தமிழகத்தில் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை 49 சதவிகிதம். துண்டு சீட்டு இல்லாமல் ஸ்டாலின் வருவாரா என்று கேள்வி எழுப்பிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் தொடர்ந்து நல்லாட்சி அமைய இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story