/* */

Kamarajar kavithaigal-சரித்திர தலைவர்களில் சாதனை நாயகன், காமராசர்..!

தமிழகத்தில் கல்வி வளரவும்,விவசாயம் செழிக்கவும் தொழில் வளம் பெருகவும் பல உன்னத திட்டங்களைக் கொண்டுவந்த ஒரே தலைவர் காமராசர்.

HIGHLIGHTS

Kamarajar kavithaigal-சரித்திர தலைவர்களில் சாதனை நாயகன், காமராசர்..!
X

kamarajar kavithaigal-காமராசர் கவிதைகள் 

Kamarajar kavithaigal

'செயற்கரிய செய்வார் பெரியர்' என்னும் வள்ளுவரின் குறள் வரிகளுக்கு ஏற்ப செயற்கரிய செயல்கள் செய்து செயல்வீரர் அல்லது கர்மவீரர் என்று போற்றப்படுபவர் காமராஜர். நாட்டின் விடுதலைக்காக மட்டுமல்லாமல் விடுதலை பெற்ற பின்னர் இந்திய நாட்டின் உயர்வுக்காகவும் அயராது பாடுபட்ட தலைவர்களுள் ஒப்பற்ற தலைவராக உயர்ந்து நிற்பவர் காமராசர். தலைநிமிர்ந்த தமிழகத்தைக் காணவிரும்பி, அயராது உழைத்த தன்னலமற்ற தலைவர் காமராசர்.

அவரைப் போற்றி கவிதைகள் இங்கு தரப்பட்டுள்ளன. நீங்களும் படித்து மகிழுங்கள்.

ஏழைகளின் கல்விக் கனவு

விடியும் முன்னே பலிக்கிறது

கற்கண்டாய் இனிக்கிறது - உன்

கல்வித்திட்டம்.

ஆரவாரம் கொள்கிறது

மதிய உணவுத் திட்டம்..!

மக்களுக்கு மகுடம் சூட்டி

படிக்காத மேதையாக

பண்பாளன்..!

உன் ஆட்சியில்

எளிமையும் நேர்மையும்

எட்டிப் பிடித்து

உன் தோளில்

தொற்றிக் கொண்டது..!

வெள்ளை உள்ளமாய்

உன்

வேட்டிக் காட்டிக்கொண்டது..!


உன் இரு தோள்களிலும்

உயிர்த் தோழனாயாய் அமர

நேர்மைக்கும் எளிமைக்கும்

வாய்ப்பு கொடுத்தாய்..!

அவை உன்னிரு

கண்களாய்

உன்னைக் காப்பாற்றின..!

இறக்கும் வரை

இறங்கவில்லை - அவைகள்

உன் தோளை விட்டு..!

Kamarajar kavithaigal

உனது எளிமையும் நேர்மையும்

காலத்தின் வாசல்களில்

உருவச் சிலைகளாக

பள்ளி,கல்லூரி என

பொது இடங்களில்

நிமிர்ந்து நிற்கிறது,

உன்

பெருமைகளை நிலைநாட்டி..!

உன் சிந்தனையில் உதித்து

உயிர் பெற்று

கம்பீரமாய் காட்சி தருகின்றன

பல தொழிற்சாலைகளும்

பல அணைக்கட்டுக்களும்..!

இன்னும் உன் பெயர் உச்சரித்து

பொன்னெழில் பூக்கிறது..!

நீ செய்த சாதனைகளால்

உன் உருவச்சிலை

உயிர் பெற்று நிற்கிறது

பட்டி தொட்டி எல்லாம்..!


மண்ணில் பிறந்து

மனதை விட்டு நீங்காமல்

சரித்திரம் படைத்த கர்ம வீரரே..!

கிங் மேக்கரே..!

ஏழைகளுக்கு உதவுவதில் வள்ளலே..!

இந்தியாவின் மற்றுமொரு அண்ணலே..!

வணங்குகிறோம் நாங்களே..!

Kamarajar kavithaigal

யார் தலைவன் ?

கல்விக்கு வழிகண்டு சோறிட்டு வளர்த்தாய் நீ !

சொல்லுக்கு இலக்கணமாய் பல திட்டஙகள் தந்தாய் நீ..!

அணைகள் பல கட்டி விவசாயம் செழிக்கச் செய்தாய் நீ..!

வினைகள் பல ஆற்றிய கர்மவீரர் ஆனாய் நீ..!

உண்மைக்கு மறுபெயர் ஆனாய் நீ..!

உத்தமத் தலைவனாய் உயர்ந்து நின்றாய் நீ..!

ஏழைகளின் வீடுகளில் தீபமாக ஆனாய் நீ..!

அணையாத சுடர்விளக்காய்

இதயத்து தலைவனும் ஆனாய் நீ..!

காமராஜர்

சிவகாமி பெற்றெடுத்த மைந்தனே..

குமாரசாமி கண்டெடுத்த புதல்வனே..

காலம் கடந்தும் கர்மவீரராய்

ஞாலம் உணர்த்தும் பெயரினை பெற்றாய்..!

படிக்காத மேதை ஆனதால்

படிப்பின் பொருள் அறிந்தாய்..!

பாரத ரத்னா எனும் விருதுக்கு சரியான

பாத்திரம் ஆனாய் நீ..!

Kamarajar kavithaigal

ஏழை மக்களின் இன்னல்கள் உணர்ந்தவர்

இலவச உணவு வழங்கி இன்புற்றவர்

எளிமைக்கும் நேர்மைக்கும் எடுத்துக்காட்டிவர்..!

வலிமை எனும் உறுதி பெற்றதால்

ஒளி மிகுந்த திட்டங்கள் கொண்டு வந்தவர்..!


பதவி சுகம் காணாத பண்பாளன்..!

உதவி என்று வந்துவிட்டால் ஓடோடி செய்பவர்..!

பெருந்தலைவர் எனும் பட்டம்

மக்கள் தந்த மகுடம்..!

மூன்று முறை ஆட்சி செய்தாய்..!

முத்தாக விளைந்தது தமிழகம்..!

சொத்தாக கட்டிவைத்தாய்

பல பள்ளிக்கூடங்கள்..!

வசதியாக வாழ

உனக்கு

வாய்ப்புகள் இருந்துமே..!

வாழ்ந்த காலம் முழுவதும்

வாடகை தந்து வாழ்ந்திட்டாய்..!

கோடிக்கணக்கான மக்களின்

இதய வீட்டில் குடிபுகுந்தாய்..!

கருப்பு காந்தியாக

கதர் உடுத்தி வாழ்ந்திட்டாய் ..!

பதர்களை களையெடுக்க

செயல்களில் இறங்கினாய்..!

கல்வியின் நாயகனாக

காலமெல்லாம் வாழுகின்றாய்..!

Kamarajar kavithaigal

நானிலம் போற்றும் நல்லவர்

காணி நிலம் இல்லா ஏழையானவர்..

கூனி கைகட்டி நில்லாதவர்

நேர்மையால் அச்சமின்றி

நிமிர்ந்து நின்றானவன்..!

கல்வி கண் திறந்த ஆசான் நீ..!

தமிழக வளர்ச்சிக்கு வித்திட்ட

தன்னலமில்லா தலைவன் நீ..!

பட்டம் வாங்காமல் உலகை

பகுத்தறிந்த மேதை நீ..!

கல்விக்கறிஞன் காமாட்சி ராஜன்

கனன்றது உன்னுள் பெரும் நெருப்பு

கல்வியின் பால் நீ கொண்ட நல்லீர்ப்பு

சுழன்றாய் கதிராய் முதல்வராய் பதவி ஏற்று

சூரராய் நெஞ்சுரம் நெடுமைக் கொண்டு

சூழலை கல்வியால் மாற்றம் கண்டு

சுழியமாய் இருந்த வாழ்வை ஏற்றம் செய்து

சூத்திரத்தின் விதையாய் முளைத்தாய் அன்று

நேத்திரங்கள் கல்வியால் நிறைந்தது இன்று

கீரிவிட்ட பாதையினிலே செழித்த விருட்சம்

கீழை மேலை தேசங்களை கூவி அழைக்கும்

வாழையாய் எண்ணி கல்வி மரத்தை நட்டாய் அன்று

வானளவு சந்தன மரமாய் வளர்ந்து மணம் வீசுது இன்று

உணவோடு உன்னதக் கல்வியை ஊட்டி வளர்த்தாய் அன்று

உணர்வோடு உன்னைத் தொழுது வாழ்கிறோம் இன்று

- நன்னாடன்.


Kamarajar kavithaigal

இனி ஒருமுறை தான் ஆட்சிக்கு வந்தாய்

பல்லாட்சி பேசும் அளவினது நல்லது செய்தாய்,..!

எளிமைக்கு நீ ஒரு எடுத்துக்காட்டு..!

தமிழ்நாட்டு மக்களுக்கு நீயே உயிர் காற்று..!

உழைப்பால் உயர்ந்த வல்லவர் நீயே..!

ஊருக்கு உழைத்த உத்தமர் நீயே..!

நாட்டிற்காக வாழ்ந்த நல்லவர் நீயே..!

நானிலம் போற்றும் நற்றலைவன் நீயே..!

தன்னை மறந்து பிறரை நினைத்து

தன் வீட்டையும் மறந்து நாட்டுக்காக வாழ்ந்தவர்..!

பல அணைகள் கட்டி நீரைத் தேக்கியவர்..!

சில சீரிய சிந்தனையால் நன்மைகள் ஆக்கியவர்..!

நீரைத் தந்து விவசாயம் காத்தவர்..!

விவசாயம் செழிக்க மின்சாரமும் கொடுத்தவர்..!

தமிழக மக்களின் மனதில் வாழும் மூத்தவர்..!

பயிர்கள் விளைந்தால் உயிர்கள் வாழும்

என்பதறிந்த படிக்காத விஞ்ஞானி..!

பசுமை செழிக்க, பல திட்டங்கள் செய்த மெய்ஞானி..!

முற்றும் உணர்ந்த முழுஞானி..!

ஆற்றலிலே இமயமலை..!

அன்பினிலே மேருமலை..!

எத்தனையோ தலைவருண்டு

இவரைப் போல யாருண்டு..?

தனக்கென வாழா பெருந்தலைவர்..!

தர்மத்தின் தடம்தனிலே செயல்தலைவர் ஆனார்..!

தலைவனாக, தரணியிலே போற்றுதலுக்கு ஆனார்..!

கலைமகளும் கையெடுக்கும் உயர்நிலைக்கு ஆனார்..!


வாழ்ந்த காலமெல்லாம் காவியங்கள் படைக்கலாம்..!

ஆண்ட காலமெல்லாம் பொற்காலம் எனலாம்..!

வீழ்ந்த தமிழகத்தின் விளைந்த நிலங்களால்

ஓங்கி வளர்ந்ததுவே உன் திட்டங்களால்..!

பேரறிவு கொண்ட மாணவர் மனதில்

நம்பிக்கை நாயகனாய் உன் முகம் மட்டுமே..!

கூரறிவு கொண்டோராய் மாற்றிட

ஒற்றைச் சிந்தனையாய் கற்றலை போற்றினாய்..!

Kamarajar kavithaigal

அருந்தலைவர் இவர்..!

பெருந்தலைவர் இவர்..!

பொதுநலத் தொண்டில்,

முழுவதுமாய் நின்றவர் இவர்..!

பொருள் தேடலில் இலக்கில்லை

வளம் தேடவும் விரும்பினார் இல்லை..!

அருள் உள்ளம் கொண்டார் அன்பின் சேவையாற்ற

மனம் முழுதும் மக்களின் உள்ளத்தில் வாழ்கிறார்..!

பகட்டான வாழ்க்கையை மறந்தவர்..!

பாட்டாளி மக்களின் மனதிலே வாழ்ந்தவர்..!

கூட்டாளிபோலவே பழகுவார்..!

குணத்திலே சொக்கத் தங்கமே குறையுமாம்..!

அழகுத் தமிழே இவரது பேச்சு.!

சமத்துவம் என்பதே இவரது மூச்சு..!

ஆணவம் என்பதை தூர எறிந்தாச்சு..!

மலர்ச்சியும் இவரால் நாட்டுக்கு வந்தாச்சு..!

கல்லாமை இல்லாமை ஆக்கிட

முயலாமை கதை தானோ இவருக்கு சாட்சி..!

இயல்பான திட்டங்கள் இவருக்கான ஆட்சி..!

விரிந்திருக்கும் வளர்ச்சிகளே அதற்கான காட்சி..!

Updated On: 4 Sep 2023 7:46 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  3. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  4. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  6. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  7. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  9. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  10. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?