இலங்கைத் தமிழர்களை கவர்ந்த கமலஜா ராஜகோபால்

இலங்கைத் தமிழர்களை கவர்ந்த கமலஜா ராஜகோபால்
X

பின்னணி பாடகி கமலஜா ராஜகோபால் 

பின்னணி பாடகி கமலஜா ராஜகோபால் பாடுகின்ற உருவாக்க பாடல்களும், ஏனைய ஆல்பம் சார்ந்த பாடல்களும் இலங்கை மக்கள் மனங்களில் இன்று நிலைத்துள்ளன - கிரிஷாந்த்.

தமிழகத்தில் வெளிவரும் நூல்களை ஆர்வத்துடன் வாங்கி படிக்கும் பழக்கம் இலங்கைத் தமிழர்களுக்கு அதிகம் உண்டு.. சென்னை புத்தகக் கண்காட்சிக்கு ஆர்வத்துடன் வருகை தந்து புத்தகங்களை வாங்கிச் செல்வதுண்டு.

இலங்கையில் சிறுவர் கதை இலக்கியங்களை பொறுத்த வரை, பாண்டிச்சேரியில் இருந்து வெளிவரும் நன்மொழி பதிப்பகத்தின் சிறுவர்களுக்கான தமிழ் கதை புத்தகங்கள் அதிகம் வரவேற்பை பெற்றவை..

அதே போல தென் இந்தியாவில் வெளியாகும் தமிழ் பாடல்கள் அதிக அளவில் இலங்கையில் விரும்பி கேட்கப்படுவதும் சிறப்பானது. பண்டைய காலம் தொட்டே தமிழகத்தின் கலை, இலக்கியம், பாடல்களுக்கு இலங்கையில் வரவேற்பு இருந்து கொண்டே வருகிறது. இது ஆரோக்கியமான ஒரு விசயமாகவே காணப்படுகின்றது என்கிறார் இலங்கையில் உள்ள மூத்த பத்திரிக்கையாளர் கிரிஷாந்த்.


கிரிஷாந்த் இலங்கையின் காட்சி மற்றும் அச்சு ஊடகங்களின் மூத்த பத்திரிக்கை ஆசிரியராக பணியாற்றி வருபவர். தமிழ் திரைப்பட பாடல்களில் இலங்கையில் பிரபலமானவை பற்றி கேட்ட போது, நம்மிடையே அவர் பகிர்ந்து கொண்டவை,

இசை என்பது அனைவரையும் வசப்படுத்தக் கூடியது, தென் இந்தியாவில் அதிகப்படியான தமிழ் பாடல்கள் அதிக அளவில் வெளி வருவது ஆரோக்கியமான ஒரு விசயமாகவே காணப்படுகின்றது.


இந்த முயற்சியானது பாடல் துறைக்கும் தமிழ் மொழிக்கும் ஆற்றப்படுகின்ற சேவையாக கருதப்படுகின்றது. தற்போதைய காலகட்டத்தில் இலங்கையில் தமிழ் மக்கள் மத்தியில் தென்னிந்திய திரைப்பட பாடல்கள் அதிக வரவேற்பு பெற்று விளங்குகின்றன. மேலும், வளர்ந்து வரும் இசைக்கலைஞர்கள் மற்றும் பின்னணிப் பாடகர்கள் ஆல் உருவாக்கப்படுகின்ற இசை ஆல்பங்கள் இலங்கையின் தமிழ் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளன.

தற்போதைய நவீன காலகட்டத்தில் அதிகளவிலான பின்னணி பாடகர்களும் பாடகிகளும் திரைத்துறைக்கு அறிமுகமாகி வருகின்றனர். இருந்தாலும் ஒரு சிலர் மாத்திரமே இன்று மக்கள் மனங்களில் நிலைத்து நிற்கின்றனர். அந்த வகையில் இலங்கை வாழ் தமிழ் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற பின்னணி பாடகியாக கமலஜா ராஜகோபால் விளங்குகின்றார். இவரது பாடல்கள் இலங்கை வானொலியிலும், தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்படுகின்றன. இது அதிக அளவில் மக்கள் மனங்களில் நின்று நிலைக்கும் ஒன்றாக விளங்குகின்றது. பின்னணி பாடகி கமலஜா ராஜகோபால் பாடுகின்ற உருவாக்க பாடல்களும், ஏனைய ஆல்பம் சார்ந்த பாடல்களும் மக்கள் மனங்களில் இன்று நிலைத்துள்ளன.

மேலும் இவர் ஒரு இசைக் குடும்பத்தைச் சார்ந்தவர் என்பதனால் இயற்கையாகவே இவருக்கு இசை மீது பற்றுக் காணப்படுகிறது. இவரது குரல் இனிமையாக இருப்பதினால் அதிகளவிலான இளைஞர் யுவதிகள் இவரது பாடல்களை விரும்பிக் கேட்கின்றனர். மேலும் இவர் பாடிய, யாதும் ஊரே, தீராத தேடல்கள் போன்ற பல பாடல்களை பலர் முணுமுணுத்து கொண்டிருப்பதை இலங்கையில் கேட்கலாம். பின்னணி பாடகி கமலஜா ராஜகோபால் வெளியிட்டுள்ள புதிய இசை ஆல்பங்கள் இலங்கை தமிழர்கள் மத்தியில் பிரபல்யம் பெற்று விளங்குகின்றன. கமலஜா ராஜகோபால் குரலில் நிறைய பாடல்களை கேட்க வேண்டும் என்பதே இலங்கை மக்களின் விருப்பம் என்கிறார் கிரிஷாந்த்.



Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!