உளுந்தூர்பேட்டை அருகே திருமணமான பெண் மர்மமான முறையில் மரணம்

உளுந்தூர்பேட்டை அருகே திருமணமான பெண் மர்மமான முறையில் மரணம்
X

திருமணமான பெண் மர்மமான முறையில் மரணம் குறித்து காவல்துறை விசாரணை

உளுந்தூர்பேட்டை வட்டம் திருநாவலூர் அடுத்த பெரியப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த திருமணமான பெண் மர்மமான முறையில் மரணம். காவல்துறை விசாரணை

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் திருநாவலூர் அடுத்த பெரியப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவரின் மனைவி வெண்ணிலா மர்மமான முறையில் இறந்து கிடந்ததை பொதுமக்கள் திருநாவலூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

அதனடிப்படையில் உளுந்தூர்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் திரு மணிமொழியன் அவர்கள் தற்போது சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்து இறந்த வெண்ணிலாவின் கணவர் குமாரிடம் திருநாவலூர் காவல் நிலையத்தில் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறார்

Tags

Next Story