உளுந்ந்தூர்பேட்டையில் மேலும் 41 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள்

உளுந்ந்தூர்பேட்டையில் மேலும் 41 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள்
X

சிசிடிவி கேமராக்களின் தொகுப்பு.

உளுந்தூர்பேட்டையில் இன்று மேலும் 41சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை காவல் துறை சார்பில் பெருத்தப்பட்டன.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் இன்று மேலும் 41சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை காவல் துறை சார்பில் பெருத்தப்பட்டன.

உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம், கிழக்கு கந்தசாமிபுரம், மாடல் காலனி, கணேஷ் நகர்,மற்றும் விருதாச்சலம் ரோடு ஆகிய பகுதிகளில் பொருத்தப்பட்டது. கடந்த ஒரு மாதத்தில் மொத்தம் 315 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தினால் மட்டும் குற்றத்தை முழுமையாக தடுக்க முடியாதுஎன்றும், பொதுமக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

மேலும் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் யாராவது சுற்றி திரிந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்