வடசெட்டியநந்தல் ஊராட்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார்.

வடசெட்டியநந்தல் ஊராட்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார்.
X

வடசெட்டியந்தல் ஊராட்சியில் ஆய்வு மேற்கொள்ளும் கலெக்டர் ஸ்ரீதர்

சங்கராபுரம் ஒன்றியம் வடசெட்டியந்தல் ஊராட்சியில் கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர் இன்று ஆய்வு மேற்கொண்டார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஒன்றியம் வடசெட்டியந்தல் ஊராட்சியில் பசுமை வீடு மற்றும் பாரத பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் தொகுப்பு வீடு கட்டுமான பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

பணிகள் நடைபெற்று வரும் வீட்டின் கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்திடவும் பணிகள் நிறைவடைந்து வீடுகளில் பயனாளிகளுக்கு உரிய பட்டியலை விரைந்து வழங்கிடவும் அறிவுறுத்தினார்,

பின்னர், இராமாஜபுரம் ஊராட்சியில் ஜல் ஜீவன் திட்டத்தில் ரூபாய் 45 லட்சம் மதிப்பீட்டில் 316 தனிநபர் வீடுகளில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்ட பணிகள் குறித்தும், மேல்நிலைநீர்த்தேக்கத்தொட்டி கட்டுமானப் பணிகள் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொண்டார்.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து மிகுதியாக வெளியேறும் தண்ணீரை மழைநீர் சேகரிப்புகட்டமைப்பின் வாயிலாக தண்ணீரை சேமிக்கவும், இதனை அனைத்து ஊராட்சிகளும் பின்பற்றிடவும் கூறினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!