திருக்கோவிலூர் அருகே பெண் எரித்துக் கொலை; கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது

திருக்கோவிலூர் அருகே பெண் எரித்துக் கொலை; கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது
X

பெண்ணை எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான கல்லூரி மாணவர்கள்.

திருக்கோவிலூர் அருகே பெண் எரித்து கொலை செய்த வழக்கில் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டை அடுத்து கொழுந்தராம்பட்டு கிராமத்தில் கடந்த 14ம் தேதி, காந்திநகர் வனப்பகுதியில் இளம்பெண் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

தகவல் அறிந்த போலீசார், 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தடயவியல் நிபுணர்களும் தடயங்களை சேகரித்து இது தொடர்பாக துப்பு துலக்கி வந்தனர்.

இந்நிலையில், பெண் எரித்து கொலை செய்த வழக்கில் கல்லூரி மாணவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் 7 பவுன் நகைக்காக பெண்ணை எரித்துக் கொலை செய்ததுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்