கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1,584 பதவிகளுக்கு 5,010 பேர் போட்டி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த 6 ம் தேதி அன்று நடைபெற்றது. அப்போது 82.25 சதவீத வாக்குகள் பதிவாகியது.
இதனை தொடர்ந்து 2-ம் கட்ட தேர்தல் நாளை (9-ம் தேதி) நடைபெறுகிறது. இதில் சங்கராபுரம், தியாகதுருகம், சின்னசேலம், கள்ளக்குறிச்சி, கல்வராயன்மலை ஆகிய 5ஊராட்சி ஒன்றியங்களுக்கும் 8 மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிக்கும் தேர்தல் நடக்கிறது.
8 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 49 வேட்பாளர்களும், 88 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 337 வேட்பாளர்களும், 180 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 605 வேட்பாளர்களும், 1,308 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 4,019 வேட்பாளர்களும், என மொத்தம் 1,584 பதவியிடங்களுக்கு 5,010 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
தேர்தல் பணியில் 198 மண்டல அலுவலர்களும் 6,393வாக்குச்சாவடி அலுவலர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 5 ஊராட்சி ஒன்றியங்கள் 66 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பொருட்கள் வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு சேர்ப்பதும், தேர்தல் முடிந்தபின் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு அன்று இரவே காவல்துறை பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படும்.
கொரோனா பாதுகாப்பு பொருட்கள் கொண்டு செல்ல 30 வாக்குச்சாவடிக்கு 1 வாகனம் வீதம் 31 சிறப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளது.வாக்குச்சாவடி பொருட்கள் மற்றும் வாக்குச்சீட்டுகள் வாக்குச்சாவடி வாரியாக பிரிக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளது.
இரண்டாம் கட்ட தேர்தலில் பதட்டமான 52 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா கண்காணிப்பும், 49 வாக்குச்சாவடிகளில் வீடியோ பதிவு கண்காணிப்பும் மற்றும் 50 வாக்குச்சாவடிளில் மத்திய அரசு அலுவலர்கள் நுண்பார்வையாளர்களாகவும் நியமிக்கப்பட்டு தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இரண்டாம்கட்ட தேர்தலில் ஆண்கள் 2,44,724 பேரும், பெண்கள் 2,45,270 பேரும், 3-ம் பாலினத்தவர் 101பேரும் என மொத்தம் 4,90,095 வாக்காளர்கள் வாக்குகளை பதிவு செய்யவுள்ளனர்.
பொதுமக்கள் வாக்களிக்க அனைத்து வாக்குச் சாவடிகளிலும் போதிய காவல் துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தகவலை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான ஸ்ரீதர் தெரிவித்து உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu