டிச.5ல் மாமல்லபுரத்தில் சர்வதேச மருத்துவ மாநாடு: அமைச்சர் மா.சுப்ரமணியன்
அமைச்சர் மா சுப்ரமணியன்
சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் பொது சுகாதார துறையின் நூற்றாண்டு விழா சிறப்பு பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
பொது சுகாதார துறை நூற்றாண்டு விழாவிற்காக பிரபல இசை கலைஞர் அறிவு எழுதி இசையமைத்து பாடிய பாடலை அமைச்சர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் வெளியிட்டார்.
அதனைத்தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது: நூற்றாண்டுவிழா விழா கொண்டாடும் வேளையில், பொது சுகாதாரத் துறை நூற்றுக்கும் மேற்பட்ட நோய்களை கண்டுள்ளது. போலியோ காலரா உள்ளிட்ட பல நோய்களை சிறப்பாக கையாண்டு பொது சுகாதார துறை ஒழித்துள்ளது. தற்போது கொரோனாவையும் இந்த துறை சிறப்பாக கையாண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
பொது சுகாதார துறையின் நூற்றாண்டு விழா வரும் டிசம்பர் 5-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை மாமல்லபுரத்தில் சர்வதேச மருத்துவ மாநாடாக கொண்டாடப்படவுள்ளது. இதில் பங்கேற்க 2000-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இதுவரை பதிவு செய்துள்ளனர்,. மற்ற நாட்டின் சர்வதேச மருத்துவ மாநாட்டை விட தமிழ்நாடு பொது சுகாதார துறை நடத்தும் இந்த மாநாட்டிற்கு அதிக மருத்துவர்கள் வருவதாக பதிவு செய்ததில் இருந்தே, இந்த துறையின் தரத்தை புரிந்து கொள்ளலாம்" என்று அமைச்சர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், துறை செயலாளர் செந்தில்குமார், பொதுசுகாதாரதுறை இயக்குனர் செல்வவிநாயகம், சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu