ஆட்கொல்லி புலியை கண்காணிப்பதில் தீவிரம்

புலிகள் காப்பக துணை களஇயக்குனர் சச்சின் துக்காராம்.
முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள T23 என்ற எண் கொண்டு அழைக்கபட்டு வரும் 12 வயது மதிக்க தக்க ஆண் புலி கடந்த சில மாதங்களாக கூடலூர் அருகே உள்ள தேவன் எஸ்டேட் சுற்றுவட்டார பகுதிகளிலும் மசினகுடி பகுதியிலும் 4 பேரை அடித்து கொன்றது. வயது முதிர்வின் காரணமாக மனிதர்களை கொன்று வரும் இந்த புலியை சுட்டு பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திய நிலையில் கடந்த 8 நாட்களாக பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை வனத்துறையினர், வேட்டைதடுப்பு காவலர்கள், கேரளா வனத்துறையினர், கால்நடை மருத்துவர்கள், அதிரடி படையினர் என 5 குழுக்களாக பிரிந்து புலியை தேடினர். காலை 7.30 மணிக்கு புலி தென்பட்டு அரை மணி நேரத்தில் மாயமானது. சுமார் 8 மணி நேரமாக தேடியு புலியை கண்டு பிடிக்க முடியாததால் குழுவினர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய புலிகள் காப்பக துணை களஇயக்குனர் சச்சின் துக்காராம்: நேற்று ஆதிவாசி அடித்து கொன்ற இடத்தில் புலி தென்பட்டதால் பிடிக்க முயற்சி மேற்கொள்ளது. ஆனால் புதருக்குள் சென்றதால் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் மோப்பநாய் கொண்டு தேடியும் சிக்கவில்லை. எனவே இன்றைய தேடும் பணி நிறைவடைந்துள்து. நாளை காலை மீண்டும் பணி தொடங்கும். இதனால் வன பகுதிகளில் ஆங்காங்கே 40 நவீன கேமராக்கள் பொருத்தபட்டுள்ளது. 3 டுரோன்கள் மூலம் தேடும் பணிக்காக பயன்படுத்தபட்டு வருகிறது. தேவைபட்டால் கும்கி யனைகளும் பயன்படுத்தபடும். எனவே புலியை பிடிக்கும் வரை கிராம மக்கள் கால்நடைகளை வன பகுதிக்குள் மேய்ச்சலுக்கு விட கூடாது. இரவு நேரங்களில் தனியாக வீட்டைவிட்டு வெளியில் வர கூடாது என்றார். மேலும் புலியை சுட்டு பிடிக்க தான் உத்தரவு வந்துள்ளதாகவும் சூழ்நிலைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கபடும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu