அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை
X
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை, திருவண்ணாமலை மாவட்டங்களில் அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான வீடு, அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். எ.வ.வேலுவிற்கு சொந்தமான பொறியியல் கல்லூரி, மருத்துவமனை சார்ந்த கல்லூரி, அவரது வீடு என பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.

தமிழ்நாடு முழுவதிலும் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் காலை 7 மணி முதல் இந்த சோதனை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எ.வ.வேலு தற்போது பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை என இரு முக்கியமான துறைகளின் அமைச்சராக உள்ளார். எனவே அவர் வகிக்கும் துறைகளில் ஏதேனும் முறைகேடுகள் நடந்துள்ளதா? வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வரி ஏய்ப்பு செய்துள்ளாரா? என்பதன் அடிப்படையில் இச்சோதனை நடைபெற்று வருகிறது.

மேலும் பொதுப்பணித்துறை ஒப்பந்தக்காரர்கள் தொடர்புடைய 40 இடங்களில் சோதனை என தகவல் 30-கும் மேற்பட்ட கார்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு சென்றுள்ளனர்.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திபுரம் பகுதியில் உள்ள நிதி நிறுவனத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மொத்தமாக 80 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சோதனை நடைபெறும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!