அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமி தோற்றால் என்ன ஆகும்?

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமி  தோற்றால் என்ன ஆகும்?
X

எடப்பாடிபழனிசாமி.

ADMK News in Tamil -அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு எடப்பாடிக்கு எதிராக வரும் பட்சத்தில் கட்சியில் பல மாற்றங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது.

ADMK News in Tamil -அ.தி.மு.க. பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் விசாரணை நடந்து முடிந்துள்ளது. ஜூலை 11ம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்ற உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜெயசந்திரன் தீர்ப்பிற்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி மேல்முறையீடு செய்துள்ளார்.

உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் ஆகியோர் வழக்கை விசாரணை செய்தனர். இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் இடைக்கால தடை எதையும் விதிக்கவில்லை. இரண்டு தரப்பும் இறுதி வாதங்களை வைத்துவிட்டன. இந்த வாரம் பெரும்பாலும் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மேல்முறையீட்டு வழக்கில் எடப்பாடி தோல்வி அடையும் பட்சத்தில் பின்வரும் சம்பவங்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளன.

எடப்பாடி கண்டிப்பாக உச்ச நீதிமன்றம் செல்வார். ஆனால் இரட்டை அமர்வு நீதிபதிகள் பொதுவாக சிவில் வழக்குகளில் கொடுக்கும் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றம் அதிக அளவில் தீர்ப்பு வழங்கியது இல்லை. இதனால் உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடிக்கு ஆதரவாக தீர்ப்பு வருமா என்பது சந்தேகம்தான். சென்னை உயர் நீதிமன்றத்தில் இரட்டை அமர்வில் எடப்பாடிக்கு ஆதரவாக தீர்ப்பு வராத பட்சத்தில் அவரின் அரசியல் எதிர்காலத்தில் பல குழப்பங்கள் ஏற்படும்.

வழக்கில் எடப்பாடி தோல்வி அடையும் பட்சத்தில், எடப்பாடிக்கு எதிராக அவரின் ஆதரவாளர்களே திரும்பும் வாய்ப்புகள் உள்ளன. அவருக்கு ஆதரவாக இருந்த ஐயப்பன் போன்ற எம்.எல்.ஏ.க்கள் ஏற்கனவே ஓ பன்னீர்செல்வம் பக்கம் சென்றுவிட்டனர். தீர்ப்பு எதிராக வந்தால் இன்னும் பலர் ஓ பன்னீர்செல்வம் பக்கம் செல்ல வாய்ப்பு உள்ளது. ஓ. பன்னீர்செல்வத்தை தீவிரமாக எதிர்க்கும் சி.வி. சண்முகம், ஜெயக்குமார் போன்ற சிலர் மட்டுமே எடப்பாடி கேம்பில் இருக்க வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே செல்லூர் ராஜு போன்றவர்கள் சைலன்ட் மோடிற்கு சென்று விட்டது குறிப்பிடத்தக்கது.

அ.தி.மு.க.வில் தீர்ப்பு எடப்பாடிக்கு எதிராக வந்தால் கட்சி உடையும் வாய்ப்புகள் உள்ளன. தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏ.க்களை திரட்டி எடப்பாடி நாங்கள் தான் அ.தி.மு.க. என்று கூற வாய்ப்பு உள்ளது. அதோடு சின்னம் எங்களுத்தான் என்று அவர் கூற வாய்ப்பு உள்ளது. நான் தான் ஒருங்கிணைப்பாளர் என்று கூறி இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வமும் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை பெற வாய்ப்புகள் உள்ளன. அ.தி.மு.க.வில் வரும் நாட்களில் கடும் மோதல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

அ.தி.மு.க.வில் தீர்ப்பு எடப்பாடிக்கு எதிராக வந்தால் கண்டிப்பாக சசிகலா எழுச்சியை எதிர்பார்க்கலாம். சசிகலா , ஓ.பி.எஸ், டி.டி.வி. தினகரன் ஆகியோர் இணைவது ஏற்கனவே கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. தீர்ப்பு வரும் பட்சத்தில் இதில் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும். இப்போது ஓ.பி.எஸ் - டி.டி.வி - சசிகலா ஆகியோர் சந்திக்காமல் அமைதியாக இருப்பதே தீர்ப்பு வர வேண்டும் என்றுதான். தீர்ப்பு வந்ததும் இந்த சந்திப்புகள் நடக்கலாம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!