துணை முதலமைச்சருக்கு செயலாளர் நியமனம்..!

துணை முதலமைச்சருக்கு செயலாளர் நியமனம்..!
X

துணை முதலமைச்சரின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் யாதவ் 

தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செயலாளராக பிரதீப் யாதவ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த மாற்றங்களின் விபரம் கீழே தரப்பட்டுளளது :-

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உயர்கல்வித்துறை செயலாளராக கோபால் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சத்திய பிரத சாகு கால்நடைத்துறை மீன்வளம் மீனவர் நலத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணையராக ராஜேஷ் லக்கானி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நந்தகுமார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையினர் நலத்துறையின் செயலாளராக இருக்கும் விஜயகுமார் ஐஏஎஸ் கூடுதலாக மனித வள மேம்பாட்டு துறையின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!