இன்று குன்னூர் அருகே விபத்துக்குள்ளான IAF Mi-17V5 ஹெலிகாப்டர் பற்றி தெரியுமா?

இன்று குன்னூர் அருகே விபத்துக்குள்ளான IAF Mi-17V5 ஹெலிகாப்டர் பற்றி தெரியுமா?

IAF MI-௧௭வ்௫ மாடல் ஹெலிகாப்டர். மாதிரி படம் 

நீலகிரி மாவட்டம்,குன்னூர் அருகே ராணுவ தளபதி சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.அந்த ஹெலிகாப்டர் பற்றிய விபரத்தொகுப்பு.
  • இராணுவ பயன்பாடுகளில் Mi-17V-5 என்ற இந்த ஹெலிகாப்டர் எந்த புவியியல் நிலையிலும், பாதகமான தட்பவெப்ப நிலைகளிலும் கூட இயங்கக்கூடிய அதிநவீன ஹெலிகாப்டர் என்று கூறப்படுகிறது.
  • ரஷ்ய தயாரிப்பான இந்த ஹெலிகாப்டர் இராணுவ பயன்பாட்டுக்காக தயாரிக்கப்பட்டது. இது பணியாளர்கள், சரக்கு மற்றும் உபகரணங்களை கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இதன் வெளிப்புறத்தில் external sling பொருத்தப்பட்டுள்ளது. அதனால் இந்த ஹெலிகாப்டர் மூலம் வெளியிலும் சரக்குகளை கொண்டு செல்ல முடியும்.

  • சூழ்நிலைக்கு ஏற்ப காற்றில் மிதந்தவாறே, தரையில் உள்ள இலக்குகளை துல்லியமாக அழிக்கும் திறன் பெற்றது. மேலும் காயமடைந்தவர்களைச் சுமந்து செல்வதில் துரிதமாக செயல்படும்.
  • இந்த ஹெலிகாப்டர் ராக்கெட்டுகள், பீரங்கிகள் மற்றும் சிறிய ரக ஆயுதங்கள் போன்றவைகளை சுமந்து செல்லும்.
  • இதை இரவும்,பகலும் இயக்கலாம். ஒரு கனமான கவச பாதுகாப்பு பொருத்தப்பட்டிருக்கும். அதனால் ஹெலிகாப்டரை அதிக உயரத்திலும், வெப்பமான நிலையிலும் கூட இயக்க முடியும். செயற்கைக்கோள் வழிகாட்டுதல் அமைப்பைப் பெற்று இருப்பதால் இலக்கு அணுகுமுறையில் இது அதிக துல்லியமானதாக கருதப்படுகிறது.

  • Mi-17V-5, Mi-8/17 - வகை ஹெலிகாப்டர்களில் தொழில்நுட்ப ரீதியாக இது மேம்பட்ட ஒன்றாகும்.

2008-ம் ஆண்டில் ரஷ்யாவின் Rosoboronexport நிறுவனம், இந்தியாவுடன் 80 Mi-17V-5 மாடல்களை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இப்படி பல மேம்பட்ட தொழில்நுட்பங்களைக் கொண்ட ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது குறித்து நாடே கவலைகொண்டுள்ளது. பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். உயர்மட்ட விசாரணை நடக்குமென்று தெரிகிறது.

Tags

Next Story