கிராம ஊராட்சி தலைவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் உயர்வு

கிராம ஊராட்சி தலைவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் உயர்வு
X
கிராம ஊராட்சி தலைவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் இரண்டு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கிராம ஊராட்சி தலைவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் மதிப்பூதியம், ஆயிரம் ரூபாயில் இருந்து இரண்டாயிரம் ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாதந்தோறும் கிராம ஊராட்சி தலைவர்கள் இந்த மதிப்பூதிய தொகையை மாநில நிதிக்குழு மானிய நிதியில் இருந்தோ அல்லது கிராம ஊராட்சி வருவாயில் இருந்தோ பெற்றுக் கொள்ளலாம்.

தலைவர் இல்லாமல், தனி அலுவலர் பொறுப்பில் செயல்படும் பஞ்சாயத்துகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது. ஊராட்சி தலைவர்கள் மட்டுமே இந்த மதிப்பூதியத்தை மாதந்தோறும் பெற முடியும் என ஊரக வளர்ச்சி முகமை உத்தரவிட்டுள்ளது.

Tags

Next Story