விநாயகர் சதுர்த்தி; சென்னையில் இருந்து விடுமுறை சிறப்பு பஸ்கள் இயக்கம்

விநாயகர் சதுர்த்தி; சென்னையில் இருந்து விடுமுறை சிறப்பு பஸ்கள் இயக்கம்
X

சென்னையில் இருந்து விடுமுறை சிறப்பு பஸ்கள் இயக்கம் (கோப்பு படம்)

சென்னையிலிருந்து மாநிலம் முழுவதும் 4 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்விடுமுறை, முகூர்த்தநாள், விநாயகர்சதூர்த்தி மற்றும் வார இறுதி விடுமுறை நாட்கள் தொடர்ந்து வருவதை முன்னிட்டு இன்று நான்காம் தேதி முதல் 7-ம் தேதி வரை சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கிளாம்பாக்கத்தில் இருந்து 725 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து 190 பேருந்துகளும், மாதவரத்திலிருந்து 20 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. சென்னையில் இருந்து திருச்சி, சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு 125 பேருந்துகளும் மற்றும் வரும் 8-ம் தேதி (ஞாயிறு) அன்று விநாயகர் சதூர்த்தி மற்றும் வார இறுதி விடுமுறை முடிந்து ஊர் திரும்ப ஏதுவாக மதுரை கோட்டத்திற்குட்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களிலிருந்து சென்னை கிளாம்பாக்கத்திற்கு 120 பேருந்துகளும் மற்றும் பல்வேறு இடங்களுக்கு 100 பேருந்துகளும் இயக்கப்படுவதாக போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

இதேபோல் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் இடைவிடாமல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் இதே பஸ்கள் விடுமுறை முடிந்து அலுவலகம் செல்பவர்களுக்காக இயக்கப்படுகிறது.

Next Story
அரசு புறம்போக்கு நிலத்தில் சாலை அமைப்பது..! ஆலை நிர்வாகத்துக்கு விவசாயிகளின் கடும் எதிர்ப்பு..!