காப்புக்கட்டுதல் வெறும் சடங்கல்ல... நம் முன்னோர்களின் மருத்துவ அறிவு!

காப்புக்கட்டுதல் வெறும் சடங்கல்ல...  நம் முன்னோர்களின் மருத்துவ அறிவு!
X

பீளைப்பூ, ஆவாரம்பூ மற்றும் வேப்பிலை கொண்ட 'காப்பு '

போகி பண்டிகை அன்று நமது முன்னோர்கள் நம் இல்லத்திற்கு வருவதாக சாஸ்திரம் சொல்கிறது. அதனால் அவர்களுக்குப் பிடித்த உணவைப் படைத்து, தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், புத்தாடைகளை வைத்து தீப ஆராதனைச் செய்து வணங்க வேண்டும்.

போகிபண்டிகை அன்று நமது முன்னோர்கள் நம் இல்லத்திற்கு வருவதாக சாஸ்திரம் சொல்கிறது. அதனால் அவர்களுக்குப் பிடித்த உணவைப் படைத்து, தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், புத்தாடைகளை வைத்து தீப ஆராதனைச் செய்து வணங்க வேண்டும்.

பொங்கலிடுவதற்கு முன்னர் "#காப்புகட்டுதல்" என்ற பெயரில் வீட்டின் வாசலில் வேப்பிலை, பீளைப்பூ, ஆவாரம்பூ கொத்துகளைச் சொருகி, சுற்றியுள்ள ஆன்மாக்களை வீட்டருகே வரச் செய்வார்கள். போகிப்பண்டிகை தினம் ஆன்மாக்களை மகிழ்விக்கும் தினமாகவும், விளைநிலங்களின் நான்கு திசைகளிலும் "காப்பு வளைத்தல்" என்ற பெயரில் எல்லைப் பகுதிகளை கண்டறிவார்கள்.

வயல்விழா

வயலும் வயலைச் சார்ந்த இடமும் மருதம் என்றழைக்கப்படுகிறது. மருதநிலத்தின் கடவுள் இந்திரன், இந்திரனுக்கு போகி என்றொரு பெயர் உண்டு. போகி என்றால் மகிழ்ச்சியானவன் என்று பொருள். விளைநிலங்களின் கடவுளான இந்திரனை வணங்கும்போது "பசி, பிணி, பகை" நீக்கி, "சம்பா, குறுவை, தாளடி" என்ற முப்போகத்திலும் நல்ல விளைச்சலைக் கண்டு முன்னேற்றம் அடைய 'வயல்விழா'வாக முற்காலத்தில் கொண்டாடப்பட்டு வந்த போகிப் பண்டிகை, காலப்போக்கில் தற்பொழுது வாசல்பொங்கலாக கொண்டாடப்படுகிறது.

"காப்புக்கட்டு" பற்றி சிறு விளக்கம்

1. ஆவாரம் பூ,

2. பீளைப்பூ,

3. வேப்பிலை,

4. தும்பை செடி, அல்லது துளசி,

5. நாயுறுவி செடி,

என ஐந்து வகையான செடிகளை காப்புகட்டுவதற்கு பயன்படுத்த வேண்டும். ஆனால் காலப்போக்கில் ஆவாரம்பூ, பூளைப்பூ, வேப்பிலை, என்று மூன்று வகை மட்டுமே பயன்படுத்திவருகிறார்கள். அதுவும் நகரங்களில் முற்றிலும் மறந்துவிட்டனர்.

மருத்துவ பின்னணி

மார்கழி மாதம் ஓசோன் படலம் பூமிக்கு அருகில் இருப்பதால் அதிக கதிர்வீச்சு பாதிப்பு வராமல் இருக்க வாசலில் கோலமிட்டு மாட்டுச் சாணத்தில் பூசனிப்பூ வைத்திருப்பார்கள். தை மாதம் முதல் பருவ நிலை மாற்றத்தால் நிறைய நோய்கள் மனிதர்களையும் கால்நடைகளையும் தாக்கும்.


எனவே முன்னெச்சரிக்கையாக தங்களைப் பாதுகாத்துக் கொள்ள போகி பண்டிகை அன்று வீடு மற்றும் தொழில் செய்யும் இடங்களின் நான்கு மூலைகள் மற்றும் வாசற்படிகளில் ஆவாரம்பூ, வேப்பிலை, சிறுபீளை, தும்பை இலை, இவைகளை ஒவ்வொரு கொத்தாத மாவிலை தோரணத்துடன் சேர்த்து காப்பு கட்டும் பழக்கத்தை கொண்டு வந்தார்கள். மாட்டுப் பொங்கலன்று மாடுகளுக்கு மாலையாகவும் கட்டி வணங்குவார்கள்.

காப்பு கட்டுவது கடமை

  • ஆவாரம்பூ உடல் வெப்பமாவதை தடுக்கும்.
  • வேப்பிலை காற்றில் இருக்கும் கிருமிகளை தடுக்கும் கிருமி நாசினி.
  • மாஇலை உடல் களைப்பை நீக்கும்.
  • சிறுபீளை நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும்.
  • தும்பை வாசம் தலைவலியை போக்க கூடியது.
  • துளசியின் மகிமை பற்றி நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான் அந்த மகாலட்சுமியின் அம்சம். அதுமட்டுமில்லாமல் காற்றை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டதாக இருக்கிறது.எனவே, இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து வீட்டு வாசலில் கட்டி வந்தார்கள் நம் முன்னோர்கள்.

எனவே அனைவரும் தங்களது இல்லங்களிலும் தொழிற்கூடங்களிலும் மேலே குறிப்பிட்டபடியோ அல்லது தங்களுக்கு தெரிந்த மூலிகைச் செடிகளை ஒன்றாக சேர்த்து நாகரீகம் கருதாமல் காப்புக் கட்டுங்கள். தங்களின் பிள்ளைகளுக்கும் மற்றவர்களுக்கும் நமது முன்னோர்களின் பாரம்பரியத்தை கடைபிடிக்க விளக்கமாகச் சொல்லிக் கொடுத்து, போகி பண்டிகையில் கடந்த காலத்தில் நடந்த நல்ல நிகழ்வுகளுக்கு நன்றி சொல்லி வணங்குவோம்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!