தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள 40 மலையேற்ற பாதைகள் எது?

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள  40 மலையேற்ற பாதைகள் எது?
X

மலையேற்ற பயிற்சி -கோப்பு படம் 

தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் 40 மலையேற்றப்பாதைகளை அறிவித்துள்ளது.

மலையேற்ற பயிற்சி மேற்கொள்பவர்கள் தமிழக அரசு வெளியிட்டுள்ள இந்த பாதைகள் வழியாக மட்டுமே மலையேற வேண்டும். அந்த பாதைகள் என்னெ்ன அதன் தன்மை என்ன என்று பார்க்கலாம்.

நீலகிரி மாவட்டம்:-

கய்ர்ன் ஹில் (எளிது), லாங்வுட் ஷோலா (எளிது), கரிகையூர் முதல் போரிவரை ராக் பெயிண்டிங் (மிதமானது), கரிகையூர் முதல் ரங்கசாமி சிகரம் (கடினம்), பார்சன்ஸ் வேலி முதல் முக்குர்த்தி குடில் (கடினம்), அவலாஞ்சி – கோலாரிபெட்டா (கடினம்), அவலாஞ்சி (காலிஃபிளவர் ஷோலா) - தேவார்பெட்டா (கடினம்), அவலாஞ்சி (காலிஃபிளவர் ஷோலா)- கோலாரிபெட்டா (மிதமானது), ஜீன் பூல் (எளிது), நீடில் ராக் (கடினம்).

கோயம்புத்தூர் மாவட்டம்:-

மாணம்போலி (எளிது), டாப் ஸ்லிப் – பண்டாரவரை (கடினம்), ஆலியார் கனால் பேங்க் (மிதமானது), சாடிவயல் – சிறுவாணி (மிதமானது), செம்புக்கரை – பெருமாள்முடி (கடினம்), வெள்ளியங்கிரி மலை (கடினம்), பரலியார் (எளிது).

திருப்பூர் மாவட்டம்:-

சின்னார் சோதனைச்சாவடி கோட்டாறு (எளிது), காலிகேசம் பாலமோர் (மிதமானது).

(திருப்பூர் மாவட்டம் சின்னாறு சோதனை சாவடி அருகே இருக்கும் மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கையும் இதில் இணைத்திருக்கலாம்)

கன்னியாகுமரி மாவட்டம்:-

இஞ்ஜிக்கடவு (மிதமானது).

திருநெல்வேலி மாவட்டம்:-

காரையார் மூலக்கசம் (மிதமானது), கல்லாறு கொரக்கநாதர் கோவில் (கடினம்).

(திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் காரையாறு அணை முதல் காணிக்குடியிருப்பு டாப் வரை ஒரு பாதையை அமைத்திருக்கலாம்)

தென்காசி மாவட்டம்:-

குற்றாலம் செண்பகதேவி நீர்வீழ்ச்சி (எளிது), தீர்த்தப்பாறை (எளிது). - (தென்காசி மாவட்டத்தில் மட்டும் இன்னும் கூடுதலாக 15 வழித்தடங்களை திறந்து விட்டிருக்கலாம்)

தேனி மாவட்டம்:-

சின்ன சுருளி – தென்பழனி (மிதமானது), காரப்பாறை (எளிது), குரங்கனி சாம்பலாறு (மிதமானது). (தேனி மாவட்டத்தில் கிட்டத்தட்ட 20 நடை வழித்தடங்கள் இருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு ஏமாற்றத்தை தருகிறது)

விருதுநகர் மாவட்டம்:-

செண்பகத்தோப்பு – புதுப்பட்டி (மிதமானது). (தானிப்பாறையிலிருந்து சதுரகிரி வரை ஒரு நடை வழித்தடத்தையும், ராஜபாளையம் அய்யனார் அருவி முதல் டாப் வரை ஒரு நடை வழி தடத்தையும் இன்னும் கூடுதலாக 8 நடை வழி தடத்தையும் அறிவித்திருக்கலாம்)

மதுரை மாவட்டம்:-

தாடகை மலையேற்றப்பாதை - குட்லாடம்பட்டி நீர்வீழ்ச்சி (கடினம்).

திண்டுக்கல் மாவட்டம்:-

வட்டகானல் – வெள்ளகவி (கடினம்), சோலார் ஆப்சர்வேட்டரி – குண்டாறு (0-பாயிண்ட்) (மிதமானது), 0-பாயிண்ட் - கருங்களம் நீர்வீழ்ச்சி (எளிது). (கிளாவரை முதல் டாப் ஸ்டேஷன் வரை ஒரு வழித்தடத்தையும், பெரிஜம் ஏரி முதல் கொட்டக்கம்பூர் வரையும் ஒரு வழித்தடத்தை அறிவித்திருக்கலாம்)

கிருஷ்ணகிரி மாவட்டம்:-

குத்திராயன் சிகரம் (கடினம்), ஐயூர் - சாமி எரி (எளிது).

சேலம் மாவட்டம்:-

குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா – குண்டூர் (மிதமானது), கொண்டப்ப நாயக்கன்பட்டி குண்டூர் (கடினம்), நகலூர் – சன்னியாசிமலை (எளிது).

திருப்பத்தூர் மாவட்டம்:-

ஏலகிரி சுவாமிமலை (எளிது), ஜலகம்பாறை (மிதமானது).

திருவள்ளூர் மாவட்டம்:-

குடியம் குகைகள் (எளிது).

அரசு அறிவித்துள்ள இந்த நடைவழி தடங்களை வரவேற்கிறோம். தான்தோன்றித்தனமாக வனப் பகுதிகளுக்குள் புகுந்து சரக்கு பாட்டில்களை உடைக்கும் இந்த காலத்தில், அரசின் முறையான வழிகாட்டுதல்களோடு நடக்கும் இந்த நடைவழித்தடங்கள் சிறப்பானது. கூடுதலாக படித்த உள்ளூர் வாசிகளுக்கு ஒரு வேலைக்கான உத்திரவாதத்தையும் அது தருகிறது என்கிற போது மட்டற்ற மகிழ்ச்சி.

தனி நபர்கள் காப்புக் காடுகளுக்குள் அமர்ந்து கொண்டு,சட்டவிரோதமாக ரிசார்ட் நடத்துவதை விட காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரையிலான இந்த பயணம் சிறப்பானது வரவேற்கத்தக்க ஒன்று என்று பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.பென்னிகுயிக் பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
சீறுநீரக பிரச்சனை இல்லாம ஆரோக்கியமா இருக்க உங்களுக்காக நச்சுன்னு நாலு டிப்ஸ்!..