சென்னை ஐகோர்ட் புதிய பொறுப்பு தலைமை நீதிபதி இன்று பதவியேற்பு

சென்னை ஐகோர்ட் புதிய பொறுப்பு தலைமை நீதிபதி இன்று பதவியேற்பு
X

சென்னை ஐகோர்ட் புதிய பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி,  நேற்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். 

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள முனீஸ்வர்நாத் பண்டாரி இன்று பொறுப்பேற்கிறார்.

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த சஞ்சீவ் பானர்ஜி, மேகலாயா ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். தலைமை நீதிபதி பதவிக்கு, மூத்த நீதிபதியாக உள்ள துரைசாமி, சென்னை ஐகோர்ட்டில் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதி முனிஸ்வரர்நாத் பண்டாரி, சென்னை ஐகோர்ட்டு மூத்த நீதிபதியாகவும், பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து, குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து, இன்று காலை சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில், முனீஸ்வர்நாத் பண்டாரி பதவியேற்றுக் கொள்கிறார்.

இதற்காக, ஐகோர்ட் புதிய பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு நேற்று வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை, அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!