/* */

11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

இன்றும், நாளையும் தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

HIGHLIGHTS

11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
X

வானிலை அறிவிப்பு 

தமிழ்நாட்டில் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக கோடை வெயிலைப்போல, வெப்பத்தின் தாக்கம் இருந்து வருகிறது. பல இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவானது .

இந்தநிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் ஆகிய 11 மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இருப்பினும், தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி வரை வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் தமிழ்நாட்டில், கோமுகி அணை 7 செ.மீ., சித்தம்பட்டி 6 செ.மீ. மலில் பதிவாகியுள்ளது

தனிமங்கலம், கும்பகோணம், காட்டுமயிலூர், மேலூர், மேட்டுப்பட்டி, தல்லாகுளம், கொடைக்கானல் பகுதிகளில் தலா 5 செ.மீ. கமுதி, கிழாநிலை, சிங்கம்புனரி, உளுந்தூர்பேட்டை, வம்பன், திருப்பத்தூர், காரைக்குடி ஆகிய பகுதிகளில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது

தேவக்கோட்டை, மதுரை தெற்கு, பார்வூட், திருவிடைமருதூர், திருமயம், கல்லிக்குடி, மஞ்சளாறு, சத்தியார், தொண்டி, இடையபட்டி, பில்லிமலை எஸ்டேட், ஏற்காடு ஆகிய பகுதிகளில் தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது.

Updated On: 10 Aug 2023 4:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  2. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  3. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  4. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  6. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  7. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  8. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!