விடிய விடிய காற்றுடன் கொட்டித்தீர்த்த கனமழை: தத்தளிக்கிறது சென்னை

விடிய விடிய காற்றுடன் கொட்டித்தீர்த்த கனமழை: தத்தளிக்கிறது சென்னை
X
சென்னை நகரில் 16 மணி நேரத்திற்கும் மேலாக பெய்துள்ள கனமழையால், பல இடங்கள் வெள்ளக்காடா மாறியுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரை கடக்கும் சூழலில், சென்னை நகரில் விடிய விடிய பெய்துள்ள கனமழையால், பல இடங்கள் வெள்ளக்காட்டாக மாறியுள்ளன.

சென்னை நகரில் நேற்று மாலை 3 மணிக்கு தொடங்கிய மழை, இரவு 10 மணியளவில் கனமழையாக மாறியது. இந்த மழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது. குறிப்பாக, தி. நகர், திருவான்மியூர், அடையாறு, அசோக் நகர், சைதாப்பேட்டை, ராயபுரம், எண்ணூர் உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது.

நீரில் மூழ்கியுள்ள சென்னை துரைசாமி சப்- வே.

இதனால், சாலைகள், சுரங்கப் பாலங்கள் நீரில் மூழ்கின. மேற்கு மாம்பலம், தி. நகர் சுரங்கப்பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளன. பெருங்குடி பகுதியில் காற்றுடன் மழை பெய்ததால், மரங்கள் சாய்ந்தன. பாதுகாப்பு கருதி பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. வ்

வேளச்சேரி பகுதியில் குடியிருப்பை சூழ்ந்துள்ள மழை வெள்ளம்.

நேற்றிரவு பெய்த மழையில் எண்ணூர் 16 செ.மீ, நுங்கம்பாக்கம் 13 செ.மீ., தரமணி 12, செ.மீ., எம்.ஆர்.சி நகர் 11 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாக, வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மழையின் தாக்கம், இன்று பிற்பகலுக்கு பின்னர் படிப்படியாக குறையும் என்று தனியார் வானிலை மைய வல்லுனர்கள் கூறியுள்ளனர்.


இதேபோல் சென்னை புறநகர் பகுதிகள், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்துள்ளது.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!