அடுத்த 2 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மிக கனமழை: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

அடுத்த 2 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மிக கனமழை: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை
X

வானிலை ஆய்வு மைய செயற்கைக்கோள் படம்.

அடுத்த 2 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மிக கனமழையும், வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிக கனமழையும், 9 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து இன்று மாலை சென்னைக்கு அருகே கரையை கடக்கும். இதனால் அடுத்த 2 மணி நேரத்தில் தமிழகத்தின் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வட கடலோர தமிழகத்திற்கு காற்று எச்சரிக்கை:

தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையின் தாக்கத்தால் அடுத்த ஆறு மணி நேரத்தில் வட தமிழக கடலோர மேற்பரப்பில் காற்று வேகம் 40 கி.மீ வேகத்தில் பலமாக வீசும் என்றும் தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இருசக்கர வாகனங்களில் பயணிப்போர் மிகவும் எச்சரிக்கையுடன் அவசியமான தேவைகளுக்கு மட்டும் பயணிக்க வேண்டும். சாலைகளில் குழி பள்ளம் மற்றும் நீர் தேங்கி உள்ள பகுதிகளில் மிகவும் எச்சரிக்கையாக பயணிக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளது.

Tags

Next Story
ai marketing future