8 மாவட்டங்களுக்கு நாளை கன மழை எச்சரிக்கை : வானிலை மையம் அறிவிப்பு

8 மாவட்டங்களுக்கு நாளை கன மழை எச்சரிக்கை : வானிலை மையம் அறிவிப்பு
X

மழை மாதிரி படம்.

8 மாவட்டங்களுக்கு நாளை கன மழை எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

8 மாவட்டங்களில் நாளை கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :

நீலகிரி, கோவை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலுார், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் சில இடங்களில் இன்று கனமழை பெய்யும் வாய்ப்புகள் இருக்கிறது.


மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான தேனி, திண்டுக்கல்.திருப்பூர், தென்காசி ஆகிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும். நீலகிரி, கோவை மாவட்டங்களில் நாளை கன மழையும் வாய்ப்புகள் உள்ளன. திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, அரியலுார், பெரம்பலுார், கடலுார் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!