புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள்: 394 பேர் கோரிக்கை மனு அளிப்பு
புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல்; போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 394 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் அளித்தனர். இம்மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர், இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மெர்சி ரம்யா உத்தரவிட்டார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அறிவுசார் குறைபாடுடைய குழந்தைகளின் தாய்மார்கள் என மொத்தம் 04 பயனாளிகளுக்கு தலா ரூ.8,000 வீதம் ரூ.32,000 மதிப்புடைய மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
மேலும், பொன்னமராவதி அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி சமையலர் நா.ஆண்டி என்பவர் இறந்ததைத் தொடர்ந்து, அவரது மகன் திரு.ஆ.தங்கவேல் என்பவருக்கு கருணை அடிப்படையில் சமையலர் நிலையில், கீரனூர் அரசு ஆதிதிராவிடர் நல பள்ளி மாணவர் விடுதியில் சமையலர் பணியிடத்திற்கான தற்காலிக பணிநியமன ஆணையினை, மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) (பொ) கி.கருணாகரன், துணை ஆட்சியர் (பயிற்சி) ஜி.வி.ஜெயஸ்ரீ மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu