'மாணவர் தலைக்கனம் படிப்பால் முதிர்வு பெறுகிறது' சென்னை பல்கலை துணைவேந்தர் பேச்சு
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
சென்னை டிடிகே சாலையில் உள்ள மியூசிக் அகடாமியில், ஆல்ஃபா கலைக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா நடைப்பெற்றது..
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரி மாணவ,மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். அவர் மாணவர்களிடையே பேசும் பொழுது தனது வாழ்க்கையில் நடந்த மூன்று குட்டி ஸ்டோரிகளை கூறி மாணவர்கள் சிந்திக்கும் வகையில் கருத்துக்களை பகிர்ந்தார்.
மாணவர்கள் இளம் வயதில் தலைக்கனத்தோடு இருப்பார்கள். படிப்பும் அறிவும் கூடக்கூட தலைக்கனம் குறைந்து முதிர்ச்சி அடைந்த அனுபவசாலியாக மாறிவிடுவார்கள். விடாமுயற்சியுடன் மாணவர்கள் செயல்பட வேண்டும். படித்த பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளையும், கல்வி கற்றுக்கொடுத்த ஆசிரியர்களையும் பெரிய அளவிற்கு வளர்ந்தாலும் மாணவர்கள் மறந்து விடக்கூடாது. கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ளவேண்டும். வாழ்க்கையில் மிக வேகமாகவும் செல்லக்கூடாது. மெதுவாகவும் செல்லக்கூடாது' என மாணவர்கள் மத்தியில் பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu