ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!

ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட   வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
X

வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்ல ஜிபிஆர்எஸ் கருவிகள் பொருத்தப்பட்ட வாகனங்கள் (கோப்பு படம்)

வாக்குப் பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்லும் வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு தொடங்கியது. தமிழகத்தில் மட்டும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இந்த ஓட்டுச்சாவடிகளில் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணிக்கு வரிசையில் நிற்பவர்கள் அத்தனை பேருக்கும் டோக்கன் கொடுத்து ஓட்டளிக்க வாய்ப்பு வழங்கப்படும். மாலை 6 மணிக்கு மேல் வரும் யாருக்கும் ஓட்டளிக்க வாய்ப்பு வழங்கப்படாது.

ஓட்டுப்போட வசதியாக தமிழகம் முழுவதும் உள்ள 1168 தியேட்டர்களிலும் இன்று காலை, மதியம் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஓட்டல்கள், டீக்கடைகள், பேக்கரிகள் வழக்கம் போல் இயங்கும். அங்கு பணிபுரிபவர்கள் ஓட்டளித்து விட்டு வந்து பணியாற்றி வாய்ப்பு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சினிமா தியேட்டர்களில் இன்று இரவு காட்சிகள் வழக்கம் போல் நடைபெறும்.

அரசு அலுவலகங்கள், பல தனியார் அலுவலகங்கள் ஓட்டுப்பதிவிற்காக விடுமுறை விடப்பட்டுள்ளன. மக்கள் கட்டாயம் ஓட்டளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இன்று இரவு 7 மணி முதல் ஓட்டுப்பதிவு எந்திரங்கள், சீலிடப்பட்டு பாதுகாப்பாக ஓட்டு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்படும். இப்படி ஓட்டுப்பதிவு எந்திரங்களை எடுத்துச் செல்லும் வாகனங்களில் ஜிபிஆர்எஸ் என்ற கருவி பொறுத்தப்பட்டுள்ளது. இந்த வாகனங்களின் செயல்பாடுகளை தேர்தல் பணிகளில் ஈடுபடும் முக்கிய அரசு அதிகாரிகள் அத்தனை பேரும் கண்காணிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்